திருப்பூர் மாவட்ட அளவிலான ரோல் பால் போட்டி!
திருப்பூர் :-
திருப்பூர் மாவட்ட அளவிலான ரோல் பால் போட்டி 2023 – 2024
அசோசியேசன் ஆப் ரோல்பால் திருப்பூர் சங்கம் நடத்திய முதல் ரோல்பால் போட்டியை சங்கத்தின் செயலாளர் மற்றும் பயிற்சியாளர் திரு.பிரகாஷ்.பா அவர்களின் தலைமையில் துவக்கி வைக்கப்பட்டது.
இப்போட்டியானது 12-07-2023 தேதியன்று ரோல்ஸ்புரோ ஸ்கேட்டிங் அகாடெமியில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இப்போட்டியில் 11 வயதிற்கு உட்பட்ட பிரிவில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வமுடன் போட்டியில் பங்கேற்று தன் திறமைகளை வெளிப்படுத்தினர்.
மேலும், வெற்றிப்பெற்று தேர்வான வீரர்களை இம்மாதம் 23 மற்றும் 24 ஆம் தேதியில் தஞ்சையில் நடைபெற உள்ள 10 வது மாநில மினி ரோல்பால் போட்டிக்கு திருப்பூர் மாவட்ட அணியாக தேர்வு செய்யப்பட்டு அனுப்பவுள்ளனர்.
இந்தப் போட்டியை இந்திய ரோல்பால் சங்கத்தின் செயலாளர் திரு.சுப்பிரமணியம் அவர்களின் வழிகாட்டுதலின்படி நடத்தப்பட்டது.
ஸ்போர்ட்ஸ் தமிழ்நாடு ரோல்பால் சங்கத்தின் செயலாளர் திரு.கோவிந்தராஜ் தலைமையில் கோயம்புத்தூர் மாவட்ட ரோல்பால் சங்க செயலாளர் திரு.ராஜசேகர் நடுவராக கலந்து கொண்டார்.
இறுதியில் இப்போட்டியில் 11 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மாணவர்கள் சஜீன் விணயக், அகில், பூவேந்திரன், அழகு கிருஷ்ணன், ரித்திவின், பவன், சபரீஸ், தியானேஸ் ஆகிய வீரர்கள் கொண்ட அணியை திருப்பூர் மாவட்ட அணியாக தேர்வு செய்யப்பட்டு இதன் பயிற்சியாளர் மற்றும் துணைப் பயிற்சியாளர் சிவனேசன் மற்றும் அரவிந்த் அவர்களால் பாராட்டுச் சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டது.
Leave a Reply