ஊத்தங்கரையில் ஜே.ஆர்.சி. புகைப்படங்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8 ஆம் ஆண்டு ஜே.ஆர்.சி புகைப்படங்கள் மற்றும் கைவினைப்பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியர் மாதப்பன் அவர்கள் தலைமை தாங்கினார்.
பெற்றோர் ஆசிரியர் கழகதலைவர் வி.சுவாமிநாதன், அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் கொ.மாரிமுத்து, ஊத்தங்கரை ரெட்கிராஸ் தலைவர் வி.தேவராசு, பி.டி.ஏ. பொறுப்பாளர்கள் கிருஷ்ணன், சக்திவேல், தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் நிலைய அலுவலர் பெ.ஜெயராஜ், வழக்கறிஞர் த.பிரபாவதி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
கண்காட்சிக்கு வருகை புரிந்தோரை உதவி தலைமையாசிரியர் கு.கணேசன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
ஜே.ஆர்.சி கண்காட்சியில் 2018-19 ஆண்டில் ஜே.ஆர்.சி. மூலம் செய்யப்பட்ட பல்வேறு செயல்பாடுகளின் புகைப்படங்கள், செய்தித்தாள்களின் தொகுப்பு, சான்றிதழ்கள், விருதுகள், பதக்கங்கள், நினைவுப்பரிசுகள், காலண்டர்கள் போன்றவைகள் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது.
ஜே.ஆர்.சி மாணவர்களால் செய்யப்பட்ட விதைபந்து, பயனற்ற பொருட்களைக் கொண்டு உருவாக்கிய புதிய பொருட்கள், இயற்க்கை சூழலில் வீடு, பழங்களால் செய்யப்பட்ட தேர் போன்ற கைவினைப் பொருட்கள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் சார்பாக முதலுதவி தொடர்பான சிறு பயிற்சிகளும் விளக்கப்பட்டது.
இக்கண்காட்சியில் ஜே.ஆர்.சி முன்னாள் மாவட்ட கன்வினர் பன்னீர்செல்வம், வட்டார கல்வி அலுவலர் ஜி.மாதேஸ்வரி, அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் பெரியசாமி, ராஜேந்திரன், தாசூன், சாந்தி, மகேஸ்வரி, உதவி தலைமையாசிரியை நிர்மலா, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய பணியாளர்கள் ராமமூர்த்தி, முனுசாமி, மணிகண்டன், தொண்டு நிறுவன நிர்வாகி உமாமகேஸ்வரி, சிக்னல் சரஸ்வதி, சசி என்கிற கோமதி, மற்றும் பல்வேறு பள்ளியை சேர்ந்தஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் சத்துணவு அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள்ஆகியோர் கலந்து கொண்டு ஜே.ஆர்.சிகண்காட்சியை பார்வையிட்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜே.ஆர்.சி ஆசிரியர் கு.கணேசன் மற்றும் ஜே.ஆர்.சி மாணவர்கள் செய்திருந்தனர்.
Leave a Reply