மதுரை, கீழச்சந்தைப்பேட்டை டாக்டர் டி. திருஞானம் துவக்கப் பள்ளியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது

Share Button

மதுரை, கீழச்சந்தைப்பேட்டை டாக்டர் டி. திருஞானம் துவக்கப் பள்ளியில் தேசிய அறிவியல் தினம் பள்ளித் தலைவர் வி. சுரேந்திரன் பாபு தலைமையில், பள்ளிச் செயலர் சதாசிவம் முன்னிலையில் நடைபெற்றது.

ஆசிரியர் ஓம்சக்தி அனைவரையும் வரவேற்றார். சர்சி்வி இராமன் கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்ற இராமன் விளைவு முன்னிட்டு தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது. மாணவர்களிடம் அறிவியல் மனப்பான்மையை உருவாக்க பள்ளிகள் தோறும் அறிவியல் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன.

அன்றாட நிகழ்வுகளில் உள்ள அறிவியல் உண்மைகளை மாணவர்கள் கண்டடைய வேண்டும். ஏன், எதற்கு, எப்படி எனக் கேள்விகள் எழுப்பக் கற்றுக் கொள்ள வேண்டும். கேள்வி கேட்பதென்பது ஆசிரியரை அவமதிப்பதன்று. அது, நாம் கருத்தில் தெளிவு பெறவும், ஆழமான புரிதல் கொள்வதற்கு மட்டுமே என்பதை உணர வேண்டும் எனத் தலைமையாசிரியர் க.சரவணன் சிறப்புரையாற்றினார்.

அறிவியல் கண்காட்சியை ஆசிரியர் தங்கலீலா திறந்து வைத்தார். ஆசிரியர்கள் கீதா, சரண்யா, பாக்யலெட்சுமி , பிரேமலதா, உஷா தேவி ஆகியோர் அறிவியல் கண்காட்சி ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். ஆசிரியர் வெங்கடலெட்சுமி நன்றி கூறினார். பள்ளித் துணைத்தலைவர் ஜெயராஜ் , பள்ளிப் பொருளாளர் உதயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

One response to “மதுரை, கீழச்சந்தைப்பேட்டை டாக்டர் டி. திருஞானம் துவக்கப் பள்ளியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது”

  1. செய்திக்கு நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *