கிருஷ்ணகிரி அருகே இந்து கொல்லூர் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற பள்ளி கல்வி சீர்வரிசை வழங்கும் விழாவில் பல்வேறு கிராம மக்கள் பள்ளிக்கு தேவையான மைக், நாற்காலி, விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை கிராம மக்கள் வழங்கினார்கள்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள இந்து கொல்லூர் கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் படிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் கல்வி சீர்வரிசை வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவின் போது மகாராஜ கடை, மாட்டு ஓணி, நாட்ரம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கிராம மக்கள் பள்ளிக்கு தேவையான பீரோ, மைக், பென்ச், விளையாட்டுப் பொருள்கள், எழுது பொருட்கள், இருக்கைகள், நாற்காலிகள், உள்ளிட்ட பல்வேறு வகையான பொருள்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் கொண்டு வரப்பட்ட சீர்வரிசைப் பொருள்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி சசிகலாவிடம் ஒப்படைத்தனர்.
மேலும் இந்த விழாவின் போது பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் கொண்டு வரப்பட்ட கல்வி சீர்வரிசை தட்டுகள் மாணவ, மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்து இருப்பதாக பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.
இந்த விழாவின் போது முன்னாள் ஆசிரியர் ஜெகதீஷன், பெற்றோர் சங்க கிருஷ்ணமுர்த்தி, மற்றும் ஊர் கவுண்டர் உள்ளிட்ட கிராம மக்களும் கலந்துக் கொண்டனர்.
Leave a Reply