ஒளிரும் கிருஷ்ணகிரி சங்கத்தின் சார்பில், பிளாஸ்டிக் பாட்டில்களை இரும்பு வளைவில் போடுவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

Share Button
ஒளிரும் கிருஷ்ணகிரி சங்கத்தின் சார்பில்  கிருஷ்ணகிரியில் நகராட்சி பகுதியில் பொதுமக்களால், வீசி எறியப்படும்  பிளாஸ்டிக்கினால் ஆன  குடிநீர், குளிர்பான பாட்டில்களை, சுகாதார நலன் கருதி அதை  சேகரிப்பிற்கான  ஆளுயர இரும்பு வளைவு  வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
கிருட்டினகிரி புதிய பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்ட பிளாஸ்டிக் சேகரிப்பு இரும்பு வளைவு தொட்டி தொடக்க விழாவில் கிருஷ்ணகிரி  நகராட்சி ஆணையர் திரு. ரமேஷ் அவர்கள், சுகாதாரத்துறை மோகனசுந்தரம் மற்றும்  ஜவுளி வியாபாரிகள் சங்க தலைவர் கோபால், செயலாளர் ராஜா,  சீனிவாசன், துணைத் தலைவர் அசோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பொதுமக்கள் பிளாஸ்டிக் பாட்டில்களை இரும்பு வளைவில் போடுவதற்கான விழிப்புணர்வை ஒளிரும் கிருட்டினகிரி  பொறுப்பாளர்கள் ஏற்படுத்தினார்கள்.
தொடர்ந்து இது போன்ற பிளாஸ்டிக் சேகரிப்பு தொட்டிகள் கிருஷ்ணகிரி நகரம் முழுவதும் வைப்பதற்கான முயற்சியை ஒளிரும் கிருஷ்ணகிரி நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *