காவேரிப்பட்டணம் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் அ.இ.அ.தி.மு.க சார்பில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் அ.இ.அ.தி.மு.க சார்பில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் ஒன்றிய கழக செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பர்கூர் சட்ட மன்ற உறுப்பினர் சி.வி.ராஜேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு ஊராட்சி கழக செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
நிகழ்ச்சியில் நகர கழக செயலாளர் வாசுதேவன், முன்னாள் ஒன்றிய செயலாளார் பிரபாகரன், ஒன்றிய இணை செயலாளர் சாரதாகிருஷ்ணன், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ரவிசந்திரன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் சரவணன், ராஜா, ஒன்றிய மாணவரணி செயலளர் சுரேந்திரன், வழக்கறிஞர்கள் சின்னதுரை, மோகன் மற்றும் ஊராட்சி கழக செயலாளர்கள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், கிளை கழக செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Leave a Reply