கிருட்டினகிரி மாவட்டம், செந்தாரப்பள்ளி ஆக்ஸ்போர்டு பள்ளியில் அறிவு திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த இனிய விழாவில் தனியார் பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் திரு. நந்தகுமார் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.
கிருஷ்ணகிரி மாவட்ட கிருஷ்ணகிரி தனியார் பள்ளிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகி திரு.மகேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பெற்றோர்கள் எப்படி சிறந்த பெற்றோர்களாக விளங்குவது, பெண் குழந்தைகளை வளர்க்கும் விதம், ஆண் குழந்தைகளின் மனதில் பெண் குழந்தைகளை பற்றிய புரிதலை ஏற்படுத்தி ஆண் பெண் இன வேறுபாடுகளை களைந்து பாலின புரிதலை ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
மேலும் பெண் குழந்தைகளை எவரும் தொட்டு பேச அனுமதிக்க கூடாது எனவும் பொள்ளாச்சி கொடூர செயலை தொடர்ந்து கோவையில், விழுப்புரத்தில் என செய்திகள் தொடர்ந்து வரும் நிலையில் இவர்களுக்கு எப்படி துணிச்சல் வந்தது குற்றம் செய்தால் தண்டனை கடுமையானதாக இருக்கும் பட்சத்தில் பெண்குழந்தைகள் மீது நடக்கும் பாலின வன் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளியாக இருக்கும் என்றும் எடுத்துரைக்கப்பட்டது.
பள்ளிகளுக்கு விடுமுறை காலம் என்பதால் குழந்தைகளை நீர் நிலைகள் இருக்கும் இடங்களுக்கு தனியாக அனுப்ப வேண்டாம் எனவும் அறிவுரை வழங்கப்பட்டது.
மேலும் (Special Coaching Classes )சிறப்பு வகுப்புகளுக்கு அனுப்பாமல் குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விட வேண்டும் என்றும் குழந்தைகளின் விடுமுறை காலத்தை கொள்ளையடிக்கும் எந்த ஒரு விஷயத்தையும் செய்யாமல் இருக்க வேண்டும் எனவும் விடுமுறை நாட்களில் குழந்தைகளை தாத்தா பாட்டி அத்தை, மாமா போன்ற உறவுகளை மேம்படுத்த அவர்கள் இருக்கும் இடங்களுக்கு அழைத்துச் சென்று உறவு முறைகளை மேம்படுத்த வேண்டும் எனவும் விளக்கமாக தெரிந்த விஷயங்களை பெற்றோர்கள் மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு செய்தியாக தனியார் பள்ளிகள் கிருட்டினகிரி மாவட்ட தலைவர் திரு.கணேசன் அவர்கள் மிகச்சிறப்பாக எடுத்துரைத்தார்கள்.
தொடர்ந்து விழாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில் மாணவர்களால் வசூல் செய்யப்பட்ட ரூபாய் 15,500.00 புற்றுநோய் மீட்பு மைய ஒருங்கிணைப்பாளர் திருமதி சிவகாம சுந்தரி அவர்களிடம் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் தனியார் பள்ளிகள் சங்கத்தின் கிருட்டினகிரி மாவட்ட தலைவர் கணேசன், சங்கத்தின் நிர்வாகிகள் முனிகிருஷ்ணன், துணைத்தலைவர் பர்கூர் ஜேக்கப் ஜார்ஜ், திரு.மோகன், தீர்த்தகிரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
Leave a Reply