கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தேசிய அளவில் கராத்தே போட்டியில் முதலிடம் பெற்ற மாணவருக்கு பள்ளி சார்பாக பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் த.மாதப்பன் அவர்கள் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர்கள் ராஜேந்திரன், நிர்மலா, கு.கணேசன் மற்றும் பயிற்சி அளித்த உடற் கல்வி ஆசிரியர் சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
தேசிய அளவில் கராத்தே போட்டி சென்னையில் நடைபெற்றது. இப்போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் எ.நிஷாந்தன் தேசிய அளவில் கராத்தே போட்டியில் முதலிடம் பிடித்தார். மாணவரை பாராட்டி சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. சாதனை புரிந்த எ.நிஷாந்தன் படிப்பு செலவை ஜேஆர்சி ஆசிரியர் கு.கணேசன் ஏற்றுக் கொள்வதாக கூறினார்.
இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Leave a Reply