ஒரே தம்பதியினருக்குப் பிறக்கும் இரு குழந்தைகள் வெவ்வேறு குணத்தில், இயல்பில் இருக்கக் காரணம் என்ன?
கேள்வி : ஒரே தம்பதியினருக்குப் பிறக்கும் இரு குழந்தைகள் வெவ்வேறு குணத்தில், இயல்பில் இருக்கக் காரணம் என்ன?
- ஆர். சிவசக்தி, பெற்றோர்
பதில் : உங்களுக்குள் வெவ்வேறு குணங்கள் மற்றும் உணர்வுகள் வெவ்வேறு தருணங்களில் வெளிப்படுவதைக் கவனித்தது உண்டா? தம்பதிகள் ஒன்றுசேரும்போது உள்ள மனநிலை, உணர்வுநிலை அக்கரு உருவாகும்போது அதற்குள் இயல்பாகவே பதிவாகிறது.
- ஓஷோனிக்ராஜ், மனநல ஆர்வலர்
இதனை அறிந்த நம் முன்னோர்கள் தம்பதியினரின் தாம்பத்தியத்திற்கான காலநேரம், பொருந்தும் நேரம் ஆகியவற்றை கணித்தார்கள். ஒரு தாய் தந்தையருக்கு கோவம் என்பது அவர்களின் பெரும்பான்மையான குணமாக இல்லாது இருக்கலாம்.
ஆனால் கலவியில் ஈடுபடும் அந்த கணவனோ அல்லது அவரின் மனைவியோ அந்த நேரத்தில் கோவமான நிகழ்ச்சியை மனதில் நினைவுபடுத்தினாலோ அல்லது கோப உணர்வை உணர்ந்தாலோ அக்கலவியினால் உருவாகும் கரு கோபத்தைப் பெரும்பான்மையான குணமாகக் கொள்ளும்.
இதைப்போல வெவ்வேறு மனநிலையில், உணர்வு நிலையில் வெவ்வேறு காலகட்டத்தில் கலவி கொள்ளும் தம்பதியினருக்கு அந்தந்த உணர்விற்கு ஏற்றாற்போல் அவர்களுடைய குழந்தைகள் அவரவர்களுடைய குணத்தில் மாறுபட்டு இருப்பர். தந்த்ரா என்று ஒரு வகையான தியானம் இன்றும் கற்றுத் தரப்படுகிறது.
கலவிக்கு முன்பு ஒருவகையான மனநிலை மற்றும் உணர்வுநிலையை தனக்குள் உருவாக்கிக் கொள்ளும் முறை இது. உண்மையில் ஒரே தம்பதிக்குப் பிறந்த வெவ்வேறு குழந்தைகள் குணத்தில் மாறுபட்டு இருப்பதற்கு வெவ்வேறு உணர்வு நிலையில் ஒன்று சேர்ந்த பெற்றோரே காரணம்.
கேள்வி – பதில் தொடரும்…
…………………………………………………………………………………………………………………………………………………
(இது பெற்றோர் – ஆசிரியர்களுக்கான வகுப்பறை)
இதை படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் ஆசிரியராகவோ, பெற்றோராகவோ இருந்தால் இதுபோன்று தங்களுக்கு எழும் கேள்விகளை எங்களுக்கு கீழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க காத்திருக்கிறார் மனநல ஆர்வலர் திருமிகு.ஓஷோனிக்ராஜ் அவர்கள். கேள்விகளை அனுப்ப : Email : puthuvaravunews@gmail.com / britosho@gmail.com
ஓஷோனிக்ராஜ்
மனநல ஆர்வலர்
Leave a Reply