ராஜஸ்தான் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் விவசாய கடன் தள்ளுபடி செய்தது போல தமிழகத்திலும்
விவசாயிகள் பெற்ற கடன் முழுவதும் தள்ளுபடி செய்ய மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் இராமகவுண்டர் வலியுறுத்தல்.
கிருஷ்ணகிரியில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் இராம கவுண்டர் தலமையில் நடைப்பெற்ற இந்தக் கூட்டத்தின் போது தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிறுவினர் அய்யா நாரயாணசாமியின் 34-வது நினைவு நாளினை முன்னிட்டு அவரின் திருஉருவப் படத்திற்கு விவசாயிகள் மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்கள்.
அதணைத் தொடர்ந்து நடைபெற்ற இந்த கூட்டத்தின் போது…
1. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வன விலங்குகளின் தொல்லையால் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளதால், விவசாய பயிர்களை நாசம் செய்யும் வன விலங்குகளை சுட்டு கொல்ல வேண்டும்.
2. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பருவமழை ஏமாற்றியதால் காய்ந்து போன ஏரிகளுக்கு தென்பெண்ணை ஆற்றில் இருந்து மின் மோட்டார்கள் மூலம் தண்ணீர் கொண்டுச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3. கிராம நிர்வாக அலுவலர்கள் அந்த அந்த கிராமங்களில் தங்கி பணி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4.விவசாயத்திற்கு மின் இணைப்பு கேட்டு கடந்த பல ஆண்டுகளாக காத்து இருக்கும் விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு கொடுக்க வேண்டும்.
உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் இராமகவுண்டர், தமிழகத்தில் விவசாயத்தினை அழிக்கும் வகையில் விளை நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரங்கள் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும், இதனையும் மீறி உயர்மின் கோபுரம் அமைத்தால் விவசாயிகள் கேட்கும் இழப்பீடு தொகை வழங்க வேண்டும்,
மேலும் ,ராஜஸ்தான், சதீஸ்கர் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் முதல்வர்கள் விவசாயிகள் வங்கியில் பெற்ற கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தது போல தமிழகத்திலும் உடனடியாக விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும், மத்திய, மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் விவசாயிகளின் இந்த கோரிக்கை நிறைவேற்றவில்லை என்றால் மாவட்ட முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக குறிப்பிட்டார்.
Leave a Reply