துபாய் சென்றடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – உலக கண்காட்சியில் தமிழ்நாட்டு அரங்கினை திறந்து வைக்கிறார்
துபாய் :-
துபாயில் முதல்வர் மு.க.ஸ்டாலின்…
துபாய் சென்றடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். உலக கண்காட்சியில் தமிழ்நாட்டு அரங்கினை திறந்து வைக்கிறார். அரசுமுறைப் பயணமாக துபாய் சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அரங்கினைப் பார்வையிட்டப் பிறகு, தமிழ்நாட்டு அரங்கினைத் திறந்து வைக்கிறார்.
துபாயில் கடந்த ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கிய உலக எக்ஸ்போ கண்காட்சி வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் மார்ச் 25 ஆம் தேதி முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை தமிழ்நாடு வாரமாக அனுசரிக்கப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து துபாய் எக்ஸ்போ கண்காட்சியில் பங்கேற்க முதல்வர் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இவை தவிர புலம்பெயர் தமிழர்களுடனான சந்திப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சியில் மொத்தம் 192 நாடுகளின் அரங்குகள் மற்றும் பிற நிறுவனங்களின் அரங்குகள் உள்ளது.
அந்தந்த நாட்டின் வரலாறு, கலாச்சாரம், பண்பாடு, தொழில்துறை வளர்ச்சி, மருத்துவம், சுற்றுலா, தொழில் துவங்க வாய்ப்புகள், வேலை வாய்ப்புகள் மற்றும் புதிய தொழில் நுட்பங்கள் ஆகியவற்றைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
மேலும் 100 அரங்குகளை பார்வையிட்டு அதற்கான முத்திரையை மஞ்சள் பாஸ்போர்ட்டில் பெற்றிருப்பவர்களுக்கு கண்காட்சி நிர்வாகம் இலவசமாக வெள்ளை பாஸ்போர்ட்டை வழங்கி கவுரவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply