கேள்வி – பதில் : என் பெற்றோர் சிலபேரிடம் பழகவும், சிலபேரிடம் பழகவேண்டாம் எனவும் சொல்கின்றனர். நல்ல நண்பர்களை தேர்ந்தெடுப்பது எப்படி?
கேள்வி : என் பெற்றோர் சிலபேரிடம் பழகவும், சிலபேரிடம் பழகவேண்டாம் எனவும் சொல்கின்றனர். நல்ல நண்பர்களை தேர்ந்தெடுப்பது எப்படி?
- பா. நித்ய கார்த்திகாயினி, ஐந்தாம் வகுப்பு
பதில் : நல்ல மற்றும் கெட்ட நண்பர்கள் அப்படீன்னு பார்க்க வேணாம் நித்யா. எப்படி இருந்தாலும் உன் வயசுல இருக்கற friends- கிட்ட மட்டும்தானே நீ பழகப் போற, இல்லையா? உன் இயல்பிற்கு ஏத்தமாதிரி பழகணும்னு உன் மனசு சொல்லும். அதுபடி friends-அ தேர்ந்தெடுத்துப் பழகிக்கோ.
- ஓஷோனிக்ராஜ், மனநல ஆர்வலர்
தேர்ந்தெடுக்கறது நீயா இருக்கட்டும். நீ பழகற உன் நண்பர்களிடம் உன்னால ஏத்துக்கமுடியாத வித்தியாசமான பழக்கங்கள், செயல்கள் ஏதாவது இருந்தா உன் பெற்றோரிடம் அதனை share பண்ணு, யோசனை கேளு. அவங்க சொல்றத நீயும் யோசிச்சு முடிவெடு. உன்மேல இருக்கற அக்கறையிலதான் உன் பெற்றோர் சிலபேர்கிட்ட பழகவும், சிலபேர்கிட்ட பழக வேண்டாம் அப்படினும் சொல்றாங்க.
அதனால அதனை நினைச்சுக் குழம்பாதே. ஒண்ணு மட்டும் மனசுல வச்சுக்கோ. உன் சம்பந்தமான எல்லாத்தையும் உன் பெற்றோரிடம் share பண்ணும் பழக்கத்தை வளத்துக்கோ. அதுவே போதும். உன் நட்பு வட்டாரம் சிறக்க வாழ்த்துகள் நித்ய கார்த்திகாயினி.
கேள்வி – பதில் தொடரும்…
……………………………………………………………………………………………………………………………………………
“எங்க ஏரியா… உள்ள வாங்க”
(இது குழந்தைகளுடன் ஓர் உரையாடல்)
இதை படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் ஆசிரியராகவோ, பெற்றோராகவோ, குழந்தைகளாகவோ இருந்தால் இதுபோன்று தங்களுக்கு எழும் கேள்விகளை எங்களுக்கு கீழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க காத்திருக்கிறார் மனநல ஆர்வலர் திருமிகு.ஓஷோனிக்ராஜ் அவர்கள். கேள்விகளை அனுப்ப : Email : puthuvaravunews@gmail.com / britosho@gmail.com
ஓஷோனிக்ராஜ்
மனநல ஆர்வலர்
Leave a Reply