கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சிறப்பு பொருளாதார மலர் ஏற்றுமதி மையம்: மத்திய வேளாண் அமைச்சரிடம் எம்பி அசோக்குமார் மனு

Share Button
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சிறப்பு பொருளாதார மலர் ஏற்றுமதி மையம்: மத்திய வேளாண்அமைச்சரிடம் எம்பி அசோக்குமார் மனு 
கிருஷ்ணகிரி டிச 20 : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மலர் ஏற்றுமதிக்கான சிறப்பு பொருளாதார மண்டலம் அமைத்து தருமாறு மத்திய வேளாண்மை துறை அமைச்சரிடம் கிருஷ்ணகிரி எம்.பி கே.அசோக் குமார் நேரில் மனு அளித்துள்ளார்.
டெல்லியில் மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் ராதாமோகன் சிங்கை நேரில் சந்தித்து கிருஷ்ணகிரி எம்.பி.கே.அசோக்குமார் மனு அளித்தார்.
அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது : 
கிருஷ்ணகிரி மாவட்டம் விவசாயத்தை சார்ந்த மாவட்டம். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தட்பவெட்பநிலை பூமியின் அமைப்பு விவசாயத்திற்கு ஏற்ற வகையில் உள்ளது . கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் பசுமை குடில் அமைக்கப்பட்டு கொய்மலர் சாகுபடி செய்யப்படுகிறது. பசுமைக்குடில் அமைக்க அரசு உதவி செய்து வருகிறது. பசுமை குடில் மட்டுமன்றி திறந்த வெளி விவசாய நிலங்களிலும் மலர் சாகுபடி செய்யப்படுகிறது. ரோஜா ஜெர்பரா, கார்நேஷன், கிரிசாந்தம், பட்டன் ரோஸ், மேரி கோல்ட், மல்லிகை உட்பட கொய் மலர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. 1200 குடில்கள் அமைக்கப்பட்டுள்ளது.
400 கோடி மதிப்பில் செடிகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இவை வெளிநாடுகளுக்கு அனுப்பும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. நாலு கோடிக்கும் அதிகமாக செடிகள், மலர்கள் வெளிநாடுகளுக்கு குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளான தாய்லாந்து, ஜப்பான், மற்றும் சில ஐரோப்பிய நாட்டு பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது, இதன் மூலம் சுமார் 50 கோடிக்கு அதிகமான அந்நிய செலவாணி நமக்கு கிடைக்கிறது. ரோசா செடி மூலம் ஐம்பது கோடிக்கும் அதிகமான விற்பனை நடக்கிறது.
கொய் மலர்கள் சாகுபடி மூலம் ஆயிரக்கணக்கான ரூபாய் வருவாய் ஈட்டப்படுகிறது. 50’00 ஏக்கர் பரப்பளவில் மலர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. 100 கோடிக்கும் அதிகமான வருட வருமானம் வருகின்றது. இதன் மூலம் விவசாயிகள் ஏற்றுமதியாளர்கள், விற்பனையாளர்கள், தொழிலாளர்கள் என 2 லட்சம் மக்கள் பயன்படுகின்றனர். பசுமை குடில் இவர்களுக்கு உதவிகரமாக உள்ளது. தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அருகே குறிப்பாக ஓசூரில் இருந்து பெங்களூர் பன்னாட்டு விமான நிலையம் அருகே உள்ளதால் ஏற்றுமதி சுலபமாக முடிகிறது.
மேலும் கிருஷ்ணகிரி, தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் சாலை வசதிகளுடன் இணைப்பில் உள்ளதால் போக்குவரத்து சுலபமாக உள்ளது, ஆகவே கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மலர் ஏற்றுமதி சிறப்பு பொருளாதார மண்டலம் அமைத்து தர வேண்டும் என இந்த பகுதி மக்கள் சார்பில் இந்த கோரிக்கையை முன்வைக்கிறேன் .
இவ்வாறு எம்.பி.கே அசோக்குமார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
…………………………………………………….
கிருஷ்ணகிரியிலிருந்து…
நமது செய்தியாளர்.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *