தயாரிப்பாளர் சங்கத்திற்கு பூட்டு போட்டதை எதிர்த்து, பூட்டை உடைக்க முயன்ற விஷயால் அதிரடி கைது
தயாரிப்பாளர் சங்கத்திற்கு பூட்டு போட்டதை எதிர்த்து பூட்டை உடைக்க முயன்ற விஷயால் அதிரடி கைது. போலீசாருடன் வாக்குவாதம்.
சென்னை தி.நகரிலுள்ள தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில், பொதுக்குழுவில் ஆலோசிக்காமல் விஷால் தன்னிச்சையாக முடிவெடுப்பதாக கூறி அழகப்பன், ரித்திஷ், எஸ்.வி.சேகர், சுரேஷ் காமாட்சி ஆகியோர் கொண்ட ஒரு குழு திடீரென தயாரிப்பாளர் சங்கத்திற்குள் வந்து போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்திற்கு விஷால் தரப்பில் கதிரேசன் சமரசம் செய்ய முயன்றார். சமாதானம் அடையாத அவர்கள் கதிரேசன் விளக்கம் திருப்தி அளிக்கவில்லை எனக்கூறி தயாரிப்பாளர் சங்க கட்டிடத்திற்கு பூட்டு போட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட விஷால் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் தி.நகரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் போலீசார் தங்கவைத்துள்ளனர்.
Leave a Reply