கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பனங்கிழங்கு விளைச்சல் அமோகம், விலை உயர்வால் பனைமர தொழிலாளிகள் மகிழ்ச்சி.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை, கல்லாவி, மத்தூர், நாடார் கொட்டாய், போச்சம்பள்ளி ஆகிய பகுதிகளில் சுமார் பல லட்சம் பனை மரங்கள் உள்ளது, இந்த பனை மரங்களை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளனர்.
இதில் பதனீர் சீசன் முடிந்தவுடன் மருத்துவ குணம் கொண்ட பனங்கிழங்கு சீசன் துவங்குகிறது. ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் துவங்கி ஏப்ரல் வரை பனங்கிழங்கு சீசன் இருக்கும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பெய்த நல்ல மழையால், பனங்கிழங்கு விளைச்சல் அதிகரித்துள்ளது.
எந்த ஒரு ரசாயன உரங்கள் இன்றி இயற்கை முறை சாகுபடி செய்யப்படும் பனங்கிழங்கை மண்ணில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு அதனை தொழிலாளிகள் சுத்தப்படுத்தி, வேக வைத்து வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பனங்கிழங்குகளை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
இது மட்டுமின்றி சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு இந்த பனங்கிழங்கு பயன்படுத்தப்படுவதால் வியாபாரிகள் மொத்தமாகவும் வாங்கி செல்கின்றனர்.
மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் பனங்கிழங்குகள், தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது.
குறிப்பாக சர்க்கரை நோயினை இந்த கிழங்கு கட்டுப்படுத்தும் தன்மை இருப்பதால், பெரியவர்கள் அதிக அளவில் வாங்குவதால் விலையும் அதிகரித்துள்ளது. தரமான பத்து கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ.20 முதல் 40 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்று பனை மரத் தொழிலாளிகள் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர்.
………………………………………………
கிருஷ்ணகிரியிலிருந்து…
நமது செய்தியாளர்
Leave a Reply