சென்னைக்கு இன்று வயசு 382 வாங்க பிறந்தநாளைக் கொண்டாடலாம்

Share Button

சென்னை :-

முன்பொரு காலத்தில் சென்னையும் ஒரு கிராமம் தான். இன்று சென்னைக்கு வயது 382 ஆகிறது. சென்னையை சுற்றிப் பார்க்கபோறோம் என்று அனைத்து ஊர்களிலிருந்து மக்கள் சென்னைக்கு விரும்பி வந்து சுற்பிப்பார்த்து செல்வார்கள். சிலர் சென்னையிலேயே குடியேறிவிடுவார்கள். அந்த சென்னைக்குத்தான் இன்று 382வது பிறந்தநாள். இன்று ஆகஸ்ட் 22ஆம் நாளை பிறந்தநாளாக சென்னை கொண்டாடிக்கொண்டிருக்கிறது.

கிழக்கு இந்திய கம்பெனி விலைக்கு வாங்கியது முதல் பல முன்னேற்றங்கள் இங்கு ஏற்பட்டன. எனவேதான் அது பெரிய நகரமாக உருவெடுத்தது. சென்னைக்கு பல பழம் பெருமைகள் உண்டு.

1688ல் இரண்டாம் ஜேம்ஸ் மன்னர், மதராஸ் நகரை முதல் நகராட்சியாக அறிவித்தார். அதாவது நாட்டின் முதல் நகராட்சியே சென்னைதான். சென்னை மாநகரம் ஆகஸ்ட் 22ம் தேதி 382வது பிறந்தநாளை கொண்டாடுகிறது. 1639ம் ஆண்டு, ஆகஸ்ட் 22ம் தேதி, சென்னை நகரம் முறைப்படி நிர்மாணிக்கப்பட்டதாக கருதி, இதையே நகரின் பிறந்த நாளாக மாற்றியுள்ளார்கள்.

1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, மதராஸ் மாகாணத்தின் தலைநகரமாக மெட்ராஸ் அறிவிக்கப்பட்டது. மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, மதராஸ் மாகாணம் வேண்டாம் என்று, 1969ம் ஆண்டு ‘தமிழ்நாடு’ என நமது மாநிலத்திற்கு பெயர் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அப்போது முதல், மெட்ராஸ், சென்னை என்று இரண்டு பெயர்களில் மக்களால் இந்த நகரம் அழைக்கப்பட்டு வந்தது. அதிலும் மெட்ராஸ் என்பதுதான் சாமானியர்களுக்கும் பழக்கப்பட்ட பெயராக விளங்கியது. அப்பெயரே மக்கள் மத்தியில் பிரசித்திப்பெற்ற பெயராக மாறிப்போயின. அதிலிருந்து மக்கள் இன்றும் மீளவில்லை என்றே சொல்லலாம். சென்னைக்குப்போறேன் என்று சொல்வதைவிட மெட்ராசுக்போறேன் என்றுதான் இன்றும் பலபேர் கூறுகிறார்கள். அப்படி ஒன்றிப்போயிருக்கிறது இன்றைய சென்னை.

1996ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி, அப்போதைய முதல்வர் கருணாநிதி தலைமையிலான அரசு, சென்னை என்ற பெயரை அதிகாரப்பூர்வ பெயராக மாற்றியது. அன்று முதல் மெட்ராஸ் என்ற சொல்லாடல் குறைந்து கொண்டே வந்து இப்போது ஏறக்குறைய மறக்கப்பட்ட பெயராகிவிட்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி சென்னைக்கு பிறந்தநாளாகக் கொண்டாடப்படுகிறது குறிப்பிடத்க்கது.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Comments are closed.