ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனனுக்கு வள்ளலார் சமூக சேவை விருது
வேலூர் :-
ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனனுக்கு வள்ளலார் சமூக சேவை விருது
பாண்டிச்சேரியில் உள்ள வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம் சார்பில் சமூக சேவை செய்து வரும் தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனன் தேர்வு செய்யப்பட்டு இன்று 06.11.2021 காலை 10 மணியளவில் பாடண்டிச்சேரியில் நடைபெறும் விழாவில் வள்ளார் சமூக சேவை விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறார்.
2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தன்னை இணைத்துக்கொண்டு சமூக சேவை செய்து வரும் காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் மற்றும் ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்பின் வேலூர் கல்வி மாவட்ட அமைப்பாளர் காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்க அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் சேவைகளை பாராட்டி வள்ளார் சமூக சேவை விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கான விழா இன்று 06.11.2021 பாண்டிச்சேரி தவளகுப்பம் சுப மங்களா மஹால் அரங்கில் எஸ் சந்திரசேகரன் தலைமையில் நடைபெறுகிறது.
முன்னதாக எம்.பாலமுருளி கிருஷ்ணன் வரவேற்று பேசுகிறார். எஸ்.புருஷோத்தமன், ஜிசேது ஜானகிராமன், வி.எஸ்.ராமதாஸ், எஸ்.தனலட்சுமி ஆகியோர் சிறப்பு அழைப்பளாகர்களாக பங்கேற்று பேசுகின்றனர்.
இந்த நிகழ்வில் 15 துறைகளை சார்ந்த 150 பேருக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்டுகிறார்கள். தாமல் கோ.சரவணன் தலைமையில் சமூ சேவைக்கு தடையாக இருப்பது காசு பணமே சுற்றுச்சூழலே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது.
சமூக சேவைகளுக்காக ”வள்ளலார் சமூக சேவை விருது” பெறும் காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனன் அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்க கீழே உள்ள அவரது எண்ணில் தொடர்பு கொண்டு வாழ்த்துகளை தெரிவித்து மகிழலாம்.
செ.நா.ஜனார்த்தனன், செயலாளர்
செல் : 9443345667
Leave a Reply