திருச்சியில் மாநில அளவிலான மியூசிக்கல் சேர் ஸ்கேட்டிங் போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்பு
திருச்சி :-
திருச்சியில் மாநில அளவிலான மியூசிக்கல் சேர் ஸ்கேட்டிங் போட்டிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்பு
திருச்சி அடுத்துள்ள ஓலையூர் பகுதியில் செயல்படும் சாய் -ஜி ரோலிங் ஸ்கேட்டிங் அகடமி வளாகத்தில்
மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகள் பயிற்சியாளர் கந்தமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
போட்டிகளை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஈஸ்வரி குழுமத்தின் இயக்குனர் சிவசண்முகம் மற்றும் தென்னிந்திய நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தின் தேசியத் தலைவர் மோகன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இப்போட்டிகள் நான்கு பிரிவாக நடைபெற்றது. 5வயது முதல் 19வயதுள்ள வீரர்-வீராங்கனைகள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் திருச்சி, நாமக்கல், சேலம், திருப்பூர், பெரம்பலூர், ஈரோடு அரியலூர், தென்காசி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மாநில அளவில் சாம்பியன்ஷிப் பட்டத்தை மாநில அளவில் முதலிடத்தை திருச்சி அணியும், இரண்டாவது இடத்தை திருப்பூர் அணியும் பெற்றனர்.
வரும் ஜனவரி மாதம் மகாராஷ்டிராவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் இன்று வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர்.
Leave a Reply