நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளையின் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் தாத்தா பாட்டிகளுடன் தீபாவளி கொண்டாடி மகிழ்ந்த தருணம்
திருப்பூர் :-
நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளையின் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் தாத்தா பாட்டிகளுடன் தீபாவளி கொண்டாட்டம் :
திருப்பூர் மாவட்டம், சேவூர் பகுதி போத்தம்பாளையத்தில் அமைந்துள்ள ” நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை” யின் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் தாத்தா பாட்டிகளுடன் தீபாவளி கொண்டாடி மகிழ்ந்த தருணம்.
நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை அமைப்பானது, கடந்த 21 ஆண்டு காலமாக அனுப்பர்பாளையம் பகுதியில் இயங்கி வருகிறது. இந்த அமைப்பின் மூலமாக சேவூர் பகுதி போத்தம்பாளையத்தில் ஆதரவற்ற முதியோர்களுக்காக காப்பகம் கட்டும் பணியில் அமைப்பின் நிறுவனத் தலைவர் ந.தெய்வராஜ் அவர்கள் ஈடுபட்டு இல்ல கட்டிட பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
முதியோர் காப்பகத்தை முழுவதுமாக கட்டி முடிக்காத நிலையில் கூட தன் அமைப்பை தேடி அடைக்கலம் கேட்டு வந்த முதியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து பராமரித்து வருகிறார் அமைப்பில் தலைவர் தெய்வராஜ் அவர்கள்.
நேற்றைய தினம் 04-11-2021 வியாழன் அன்று தீபாவளி தினத்தை கொண்டாடிடும் வகையில், திருப்பூர் மாவட்டம், சேவூர் பகுதி போத்தம்பாளையத்தில் அமைந்துள்ள நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை என்ற ஆதரவற்ற சாலையோர மனநிலை பாதித்தோர், வயது முதிந்தோர்களுக்கான காப்பகத்தில் முதியவர்களுடன் குழந்தைகளும் இணைந்து இனிப்புகளும், புத்தாடைகள் வழங்கியும், உணவு பரிமாரியும் தீபாவளியை கொண்டாடினபுதுவர்.
இந்த புதிய காப்பகமானது கட்டிடடப் பணியில் முழுமையாக ஈடுபட்டு கட்டி வருகிறார்கள். ஆதரவற்ற முதியவர்கள், மனநிலை பாதித்தவர்கள் என அவர்களின் மறுவாழ்வு இல்லமாகவே இந்த கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இங்கு இல்லக்கட்டிடப் பணிகள் இன்னுமும் கட்டி முடிக்கப்படாத சூழலில் இருந்திருந்தாலும் ஒரு மாதத்திற்கு முன் வயதான தாத்தா பாட்டிக்கு இந்த இல்லத்தை தேடி அடைக்கலம் நாடினார்கள்.
அதன் அடிப்படையில், அவர்களது உண்மை நிலையறிந்து வேறு முதியோர் இல்லத்தில் சேர்க்க முயன்று இயலாத நிலையில் அந்த முதியவர்களின் விருப்பத்தின் பேரில் புதியதாக கட்டி வரும் நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளையின் முதியோர் காப்பகத்தில் தங்க வைத்து பராமரித்து வருகிறார் சமூக ஆர்வலர் ந.தெய்வராஜ்.
முதியவர்கள் கூறுகையில்… ஐயா நாங்களே தற்போது சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருகின்றோம் என கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டார்கள் தாத்தா பாட்டி. இவர்களது மகன் மருமகள் இருவரும் தனது வீட்டுச் சொத்தை எழுதி வாங்கி விட்டும் வீட்டை விட்டு வெளியில் விரட்டி விட்டனர்.
இரு மகள்களுக்கு திருமணமாகிவிட்ட இந்த சூழலில் கோயம்புத்தூரில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களில் சங்கரபாண்டியன் சரசு ஆகிய நாங்கள் இருவரும் சேர்ந்து வாட்ச் மேனாக வேலைபார்த்து வந்ததாகவும் கடந்த 1 வருடத்திற்கு முன் வாட்ச் மேன் வேலை பார்த்து வந்தபோது சூறாவளி காற்று வீசியதில் எதிர்பாராத விதமாக பெரிய இரும்பு கேட் தன் மீது விழுந்ததில் பெரும் விபத்து ஏற்பட்டு கால் முறிவு ஆனது.
கோயம்புத்தூர் அரசு மருத்துவக்கல்லூரியில் 3 மாதம் தங்கி சிகிச்சை பெற்று வெளியில் வந்த நாங்க கொரோனா எனும் கொடிய வைரஸ்சும் மேலும் மேலும் எங்களைத் துரத்தி விரட்டியடித்தது.
என்ன செய்வதென்றே புரியாமல் இனி வேலைக்குச் சென்று பிழைப்பு நடத்த முடியாத நாங்க வாழ்வதா சாவதா எனும் மரணப்பிடியில் பல இடங்களில் உள்ள முதியோர் காப்பகத்தை அனுகி கேட்டோம்.
அப்படி கேட்ட வகையில் யாரும் சேர்க்க முன்வராத இந்த நிலையில் கோவையில் இருந்து வேலம்பாளையத்தில் இயங்கி வரும் டிஸ்ஸோ ஆனந்த் அவர்களின் உதவியை நாடிய பின் எங்களது நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளையுடைய நிறுவனராகிய தெய்வராஜ் ஆகிய என்னையும் என் இல்லத்தின் வேலை நடக்கும் கட்டிடத்தினையும் நேரில் வந்து சந்தித்தார்கள்.
எங்கள் இல்லக்கட்டிடப்பணி இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை தாத்தா பாட்டி நீங்க இருவரும் இங்கேயே தங்கிக்கொள்வீர்களா என கேட்டபோது வாழ்வதா சாவதா என நாங்க எங்கு செல்வதென தெரியாமல் உணவில்லாமலும் உறங்க இடமில்லாமலும் இருந்த எங்களுக்கு தங்களது இல்லத்தின் கட்டிட வேலை முடியாமல் இருப்பினும் எங்களின் வயதான உடல் நிலையறிந்து எங்களுக்கு உதவும் கடவுளயய்யா நீங்கள்.
இருப்பதைக் கொண்டு வயதான நாங்க தங்க வழிவகுத்து அனுமதி வழங்கினாலே போதும் என மனம் உருகி தாத்தா பாட்டி கண்ணீர் சிந்திய இவர்களுக்கு தற்போது உள்ள இல்லக்கட்டிடப்பணியில் ஓரிரு பகுதியை ஒதுக்கி இருப்பதில் அடைக்கலம் தந்து இவர்களுக்கான மறுவாழ்வு அளித்து வருகிறது நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை.
தொடர்ந்து பாதுகாத்தும் அவர்களுக்கு தேவையான வசதியகளையும் செய்து வருவதாகவும் கூறுகிறார் நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை அமைப்பின் நிறுவனர் ந.தெய்வராஜ் அவர்கள்.
தனக்காவும் தன் குடும்பத்திற்காகவும் தீபாவளியை கொண்டாடி மகிழ்வதை விட ஆதரவற்றோரின் அன்பை பகிர்ந்து அவர்களது மனங்களை மகிழ்விக்கும் விதமாக இந்த வருட தீபாவளி தினத்தை எங்களது ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கவைக்கப்பட்ட தாத்தா பாட்டிகளுடன் தீபாவளி திருநாளை காலை முதல் மாலைவரை அவர்களுடன் சேர்ந்து புத்தாடை உடுத்தி பட்டாசு வெடித்தும் உணவிட்டும் சுவீட் சாப்பிட்டும் தீபாவளியை தாத்தா பாட்டியுடன் கொண்டாடி மகிழ்ந்தோம் என்கிறார் தெய்வராஜ்.
நாம் வாழும் இந்த புண்ணிய பூமியில் இருக்கும் காலம் வரை ஆதரவற்றோரை புறம்தள்ளி வேடிக்கை பார்க்காமல் என்னென்றும் அன்பு காட்டி நம் வீட்டின் உறவாக எண்ணி அரவனைப்பு தருவதே நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளையின் நோக்கம் என்கிறார் தெய்வராஜ் குழுவினர்.
நீங்களும் இவர்களை வாழ்த்திடவோ, பொருளுதவியோ, கட்டிடத்திற்கு தேவையான பண உதவியோ செய்திட தாங்கள் விரும்புகிறீர்களா… அப்படி எனில் கீழே உள்ள நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளையின் நிறுவனர் ந.தெய்வராஜ் அவர்களின் செல் எண்ணில் தொடர்பு கொண்டு வாழ்த்திடுங்கள் உதவிடுங்கள்… மகிழ்வித்து நீங்களும் மகிழ்ந்திடுங்கள்.
தொடர்புக்கு…
ந. தெய்வராஜ், போத்தம்பாளையம், திருப்பூர் மாவட்டம்.
செல்: 9442372611
Leave a Reply