முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் பிறந்த நாளினை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக சார்பில், பர்கூரில் மரக்கன்றுகளை நட்டு நலத்திட்ட பணிகளை சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்

Share Button
முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் பிறந்த நாளினை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக சார்பில், பர்கூரில் மரக்கன்றுகளை நட்டு நலத்திட்ட பணிகளை சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் அதிமுக ஒன்றிய கழகத்தின் சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் 71-வது பிறந்த தின விழா வெகுவிமர்ச்சியாக நடைபெற்றது.
பர்கூர் அ தி மு க ஒன்றிய செயலாளர் ஜெயபால் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவின் போது பர்கூர் பேருந்து நிலையம் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த செல்வி ஜெயலலிதாவின் திரு உருவப்படத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் இராஜேந்திரன் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து கேக் வெட்டியும் இனிப்புகள் வழங்கி நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. இதன் பின் எம்.ஜி.ஆர் -ரின் திரு உருவச் சிலைக்கு மாலை அணிவித்த சட்டமன்ற உறுப்பினர் இராஜேந்திரன் அவர்கள் பர்கூர் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடும் பணிகளையும் துவக்கி வைத்தார்.
இந்த விழாவின் போது முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் பெருமாள், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் மாதையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *