நல்லாசிரியர் விருதுக்கு கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி தேர்வு
திருவண்ணாமலை :- கண்ணமங்கலம், செப். 5
நல்லாசிரியர் விருதுக்கு கீழ்வல்லம் ஆசிரியை விஜயலட்சுமி தேர்வு
ஆசிரியராக இருந்து குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
செப்டம்பர் 5-ல் நல்லாசிரியர் விருது
நாட்டில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு செப்டம்பர் 5 ஆம் தேதி நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுவருகிறது. அந்த வகையில், நல்லாசிரியர் விருதுக்கு கீழ்வல்லம் ஊரைச் சேர்ந்த ஆசிரியை விஜயலட்சுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர், கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆங்கில பட்டதாரி ஆசிரிராக பணிபுரிந்து வருகிறார். ஆசிரியர் தினவிழா முன்னிட்டு, நல்லாசிரியர் விருதுக்கு இவர் தேர்வாகியுள்ளார்.
தேசிய நல்லாசிரியர் விருது
அடுத்த வாரத்தில் திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் அமைச்சர் எ.வ.வேலு இவ்விருதினை வழங்குவார் என கூறப்படுகிறது.
Leave a Reply