எங்கள் குடும்பமே ஆசிரியர் குடும்பம், அதனால என்னையும் B.Ed., படிக்கனும்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாங்க

Share Button
கிருஷ்ணகிரி :-
எங்கள் குடும்பமே ஆசிரியர் குடும்பம். அதனால என்னையும் B.Ed படிக்கனும்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாங்க எங்க வீட்டுல. M.A., B.Ed., முடிச்சுட்டு நீ என்ன வேணும்னாலும் பண்ணலாம்னு வீட்டுல உத்தரவு. ஆனா ஒரு PG degree, ஒரு professional degree படிச்சு முடிச்சிட்டு தான் வேலைக்கு போகனும்னு Strict ஆ சொல்லிட்டாங்க.
ஆசிரியப்பணியே அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி
ஆனா B.Ed., படிக்கும் போதும் Part Time செய்தி வாசிப்பாளர் வேலையை மட்டும் விடல. B.Ed., படிக்கும் போது 100 நாள் அரசு பள்ளியில் Trainee Teacher ஆ போகனும். நான் Krishnagiri Dam Govt School தேர்ந்தெடுத்தேன். 6th to 10th English class குடுத்தாங்க. முதல் நாளில் இருந்தே பசங்க அவ்ளோ பாசமா இருப்பாங்க.
நான் trainee Teacher ங்கறதால colour full ஆ Charts லாம் எடுத்துட்டு போய் க்ளாஸ் எடுப்பேன். ரொம்ப ஆர்வமா பாடத்தை கவனிப்பாங்க. Hema Miss miss னு கூடவே இருப்பாங்க. B.Ed வகுப்புகள் கடைசி நாள்ல Commission வைப்பாங்க. அங்க நம்ம போன School பசங்களோட Review letters வைக்கனும்.
அதுக்கு பசங்க கிட்ட நான் 100 நாள் எப்படி Class எடுத்தேன்னு எழுதி தர சொன்னேன். நாளைக்கு எடுத்துட்டு வரோம் miss னு சொல்லி அடுத்த நாள் ஒருத்தர் விடாம எடுத்துட்டு வந்தாங்க.
அதுல சில பேர் Rose லாம் வச்சு decorate பண்ணி அழகா கொண்டு வந்தாங்க. ஒவ்வொன்னா படிக்கும் போது கண் ல கண்ணீர் வந்துடிச்சு. நீங்க நல்லா motivate பண்ணிங்க, கதை சொன்னிங்க, அப்பா அம்மா வ மதிக்க சொன்னிங்க, நல்லா படிக்க சொன்னிங்க னு சின்ன சின்ன விஷயத்தை கூட அவ்ளோ அன்பா பாசமா எழுதி இருந்தாங்க. நீங்க எங்கள விட்டு போகாதிங்க மிஸ்னு அழாத குறைதான்.
மறக்க முடியாத அழகான நாட்கள். Miss u Students B.Ed Final Exam Result ல College First student. ஆனா Passion மீடியா மேல இருந்ததுனால அப்படியே life உம் மாறிடிச்சு.
Mobile Journalism Online classes
தற்போது மாணவர்களுக்கு Online செய்தி வாசிப்பாளர் பயிற்சி வகுப்புகளை எடுத்துவரும் Hema Rakesh,  இப்போது மீடியா வகுப்புகள் மூலமாக மீண்டும் எனக்கு பிடித்தமான ஆசிரியர் பணி தொடங்கி இருக்கிறேன் என பெருமிதத்துடன் கூறுகிறார் Hema Rakesh Teacher.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *