பெங்களூரில் பயங்கரமாக ஆடி கார் பிளாட்பாரத்தில் மோதி ஒசூர் எம்எல்ஏ மகன் உட்பட 7 பேர் பலி

Share Button

 

பெங்களூர், கர்நாடகா :-

பெங்களூரில் பயங்கரமாக ஆடி கார் பிளாட்பாரத்தில் மோதி ஒசூர் எம்எல்ஏ மகன் உட்பட 7 பேர் பலி.

பெங்களூரில் பயங்கரமாக கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 7 பேர் பலி. கர்நாடக மாநிலம் பெங்களூர் கோரமங்களாவில் சாலை தடுப்பு சுவற்றில் மோதி ஆடி கார் அப்பளமாக நொறுங்கி விபத்துக்குள்ளானதில் அக்காரில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அப்பளமாக நொறுங்கிய ஆடி கார்

பெங்களூரில் கோரமங்களா சாலையில் நடைபாதை சுவற்றில் ஆடி கார் மோதி தீப்பிடித்து எரிந்ததில், ஓசூர் திமுக எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் மகன் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

7 பேர் பலி

பெங்களூர் கோரமங்களா பகுதியில் இன்று அதிகாலை 1.30 மணி அளவில் இந்தக் கோர விபத்து நடைபெற்றுள்ளது. இந்த கார் அதிவேகமாக இயக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. மிகவும் விலை உயர்ந்த காரான ஆடி காரில் எம்எல்ஏ மகன் உட்பட 7 பேர் அதில் பயணம் செய்துள்ளனர். சாலை தடுப்பில் கார் மோதிய விபத்தில் அதில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயரிழந்தனர்.

3 பெண்கள் உயிரிழந்தனர், சம்பவ இடத்திற்கு போலீஸ் விரைந்தனர் 

இந்த விபத்தில் 3 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் அதிகாரிகள் விபத்து குறித்து விசாதணை நடத்தி வருகின்றனர்.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Comments are closed.