உலகத் திருக்குறள் பேரவையின் திருப்பூர் மாநகரக் கிளை சார்பாக ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்
திருப்பூர் :-
உலகத் திருக்குறள் பேரவையின் திருப்பூர் மாநகரக் கிளை சார்பாக ஆசிரியர் தின விழா (5-9-2021 – இன்று) திருப்பூரிலுள்ள பி.என்.ரோடு, கண்ணன் மருத்துவமனை வளாகத்தில் கொண்டாடப்பட்டது.
ஆசிரியராக இருந்து குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
நாட்டில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு செப்டம்பர் 5 ஆம் தேதி விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது.
உலகத் திருக்குறள் பேரவை – திருப்பூர் மாநகரக் கிளை
ஆசிரியர் தினத்தில் திறன்பட செயல்பட்ட ஆசிரியர்களுக்கும், பல சமூக சிந்தனையாளர்களுக்கும் விருது மற்றும் நினைவுப் பரிசுகள் உலகத் திருக்குறள் பேரவையின் திருப்பூர் மாநகரக் கிளை சார்பாக அனைவருக்கும் வழங்கி கௌரவப்படுத்தினார்கள்.
மேடையில் மாணவி கா.ஓவியாவின் அசத்தலான பேச்சு
மேடையில் ஆசிரியரின் நன்மையைப் பற்றி சுவாரசியமாக பேசிய சாதனை மாணவி கா.ஓவியா பேச்சு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
திருப்பூரிலிருந்து நமது நிருபர்
ந.தெய்வராஜ்
Leave a Reply