பழையச் சோறு
பழையச் சோறு…
பச்சரிசி பழையச் சோறு
பதமா இருக்குது
பச்சை மிளகாய் கூட
காரமாய் இருக்குது
சின்ன வெங்காயம் இங்கு
சிறப்பாக இருக்குது
அள்ளி அள்ளி தின்ன இப்போ
ஆசையா இருக்குது
அத்தனையும் உடலுக்கு
உரமாகப் போகுது
*
பழைய சோறு தமிழரின்
சிறப்பான உணவு அல்லவா
தமிழகத்திற்கு இதனால்
பெயர் அல்லவா
*
கஞ்சி இல்லா ஏழையரும்
நாட்டில் இருக்கிறார்
பசியோடும் பட்டினியோடும்
வாழ்ந்து மடிகிறார்
செயற்கை உணவு உண்டு பலர்
செத்து போகிறார்
இயற்கை உணவின் மகத்துவம்
அறியாது மாண்டு போகிறார்
நல்ல உணவு தின்று நாளும்
நலமாய் வாழுங்க
நம்ம பூமித் தாயை
போற்றி மகிழுங்க…
– எம் கே ராஜ்குமார்
Leave a Reply