ஒரு துளி விந்தின்
பிரயாணமே
நீயும் நானும்
?
உயிர்களின் உறவால்
உதிரத்தின் வலியால்
வழிந்திடும் கண்ணீர்
ஒரு துளி
?
முன்னூறு நாட்கள்
முடிந்த பின்னாலே
முட்டி மோதி
வெளி வரும் நேரம்
கண்களின் ஓரம்
கண்ணீர் ஒரு துளி
?
உறவுகள் வெறுக்கையில்
உணர்வுகள் மறுக்கையில்
பிள்ளைகள் விரட்டையில்
பசியால் துடிக்கையில்
வழிந்திடும் கண்ணீர்
ஒரு துளி
?
மரண படுக்கையில்
மலஜலம் கழிக்கையில்
எல்லாம் இருந்தும்
எதுவுமில்லாமல்
கண்களை மூடும்
கடைசி நொடியில்
கண்ணீர் ஒரு துளி
?
உயிர் என்பது வேறொன்றுமில்லை
ஒரு துளி
கவி செல்வ ராணி திருச்சி
Leave a Reply