சவரிமுத்து, டாக்டர் ரோஸ் மேரி அவர்களின் வைரவிழா திருமண ஆண்டை முன்னிட்டு லிட்டில் ஃப்ளவர் பள்ளி குழுமத்தின் சிறப்புக் கருத்தரங்கம் – மன்னிப்பும் விட்டுக்கொடுத்தலும்

Share Button

குன்றத்தூர், சென்னை :-

திரு.சவரிமுத்து, டாக்டர் ரோஸ் மேரி அவர்களின் வைரவிழா திருமண ஆண்டை முன்னிட்டு லிட்டில் ஃப்ளவர் பள்ளி குழுமத்தின் சிறப்புக் கருத்தரங்கம். ”மன்னிப்பும் விட்டுக்கொடுத்தலும்”. பயணம் – 5.

அன்பு நண்பர்களே, வணக்கம்!

நான் உங்கள் S.ஜான் சேவியர் தங்கராஜ். எங்கள் தாய் தந்தையருடைய 60-வது திருமண ஆண்டு விழாவை நாங்கள் இணையத்தளம் வாயிலாக கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் என்பதை பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் உங்கள் அனைவரிடத்திலும் பகிர்ந்துகொள்வதில் மனநிறைவு கொள்கிறேன்.

ஒரு கல்வியாளராக நாங்கள் இந்த வைர விழாவை அர்த்தத்தோடும், எங்களுக்கு கிடைக்கும் இந்த ஆசிர்வாதத்தை மற்றவர்களும் பயன் அடையும் வகையிலும், இணைய வழி வாயிலாக 6 மாதங்கள்
60 குடும்பங்களுடன் இணைந்து 60 கருத்துக்களை மையப்படுத்தி 6 தலைப்புகளாக அட்டவணைப்படுத்தி
கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பத்தாண்டு அனுபவத்தை எங்கள் தாய் தந்தையர் பகிர்ந்து வருகிறார்கள்.
இதுவரையில் நான்கு தலைப்புக்கள் முடிந்துள்ளது.

• அன்பு
• ஆரோக்கியம்
• உழைப்பு
• நீதி

ஐந்தாவதாக “விட்டுக்கொடுத்தலும் மன்னிப்பும்” என்கிற தலைப்பில் இன்றைய (11/12/2021) நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் எங்கள் தாய் தந்தையர் அவர்களுடைய ஐந்தாவது பத்தாண்டு அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள். இந்நிகழ்ச்சி ஜூம் வழியாக நடைபெற உள்ளது.

சிறப்பு விருந்தினராக பட்டிமன்றத்தின் புகழ் நகைச்சுவை மன்னன் கு.ஞானசம்பந்தன் அவர்கள் “விட்டுகொடுத்தலும் மன்னிப்பும்” என்கிற தலைப்பில் உரையாட இருக்கிறார்.

எனவே, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அனைவரும் குடும்பத்தோடு எங்களுடைய குடும்ப நிகழ்ச்சியில் உங்கள் அனைவரையும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

இதற்கான ஜூம் ஐடி: 7901020308 / (இதற்கு password இல்லை)
நேரம் : மாலை 6 முதல் 7 மணி வரை

குடும்பமாக வாருங்கள் எங்கள் தாய் தந்தையருடைய ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ளுங்கள் நீங்கள் கேட்கின்ற இந்த குடும்ப மதிப்பீடுகள் உங்கள் குடும்பத்தை மென்மேலும் மதிப்புடையதாக மாற்ற
வாழ்த்துக்கள். நன்றி!

நான் உங்கள்,

S.ஜான் சேவியர் தங்கராஜ்,

லிட்டில் ஃப்ளவர் பள்ளி குழுமம், குன்றத்தூர் – சென்னை.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *