60ஐ 58ஆக மாற்றுவதென்பது தேவையானது மட்டுமல்ல, சரியானதும்கூட அரசுக்குக்கோரிக்கை

Share Button

60ஐ 58ஆக மாற்றுவதென்பது தேவையானது மட்டுமல்ல, சரியானதும்கூட அரசுக்குக்கோரிக்கை :

தமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60 லிருந்து 58 ஆக குறைப்பதென்பது தேவையான நடவடிக்கை என்பதைவிட, மிகச் சரியான நடவடிக்கை என்றுதான் குறிப்பிட வேண்டும்.

ஏனெனில் நீண்ட காலமாக பணிபுரிந்து கொண்டிருக்க கூடிய ஓர் அரசு ஊழியருக்கு சரியான நேரத்தில் பணி ஓய்வு வழங்குவதும் அப்பணியிடத்திற்கு பணியில்லாமல் படித்துவிட்டுக் காத்திருக்கும் பல லட்சக்கணக்கான இளைய தலைமுறைகு வழிவிடுவதற்கும் இதுவே சரியான அணுகுமுறையாக அமையும்.

பணப்பலன் வழங்குவதற்கு சிரமமாக இருக்கிறது என்னும் காரணத்தினாலோ, சலுகை வழங்குகிறோம் என்னும் பெயரினாலோ இதுபோன்ற நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தினால் இளைஞர் சமுதாயம் தளர்ந்து போய்விடும்.

தொடர்ந்து பணிபுரிந்துகொண்டிருக்கும் 55 ஐ கடந்த நபர்களுக்கு வயது மூப்பின் காரணமாக பணியில் சிறு தளர்ச்சி ஏற்படும். எனவே அவர்களுக்குச் சரியாக 58 வயதில் பணி ஓய்வு வழங்குவது என்பது சரியான ஒன்றாகவே இருக்கும். அத்தகைய சூழலில் ஒருவருக்கு ஓய்வு வழங்கினால், அதே தொகையில் மூவரை பணிக்குப் புதிதாக நியமனம் செய்துகொள்ள முடியும். பணியும் சிறக்கும்.

ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களும், படித்துவிட்டுக் காத்திருக்கும் இளையதலைமுறையும் முடங்கிக் கிடக்கின்ற சூழலில் 60 ஐ 58 ஆக மாற்றுவது மிகுந்த பலன் தரும். இதை தமிழ்நாடு அரசு செய்யும் என நம்புகிறேன். அவசியம் செய்ய வேண்டும் எனக் கோருகின்றேன்.

சிகரம்சதிஷ்குமார்
எழுத்தாளர்- ஆசிரியர்

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *