இயற்கையோடு வாழ்ந்திடு – இயற்கை வளங்களையெல்லாம் நேசிக்க தவறிவிட்டோம்
இயற்கையோடு வாழ்ந்திடு…
வெயிலாக நீ சுட்டெரித்தபோதும் கூட
நான் தாங்கிக்கொண்டேன்..!
நிழலாக நீ குளுமை தந்தபோது
நான் நின்றுகொண்டேன்..!
பனியாக நீ பொழிந்தபோதும் கூட
நான் ஏற்றுக்கொண்டேன்..!
குளிராக நீ தண்மை தந்த போது
நான் போர்த்திக்கொண்டேன்..!
மழைச்சாரலாய் நீ வந்தபோது
நான் சிலிர்த்துக்கொண்டேன்..!
மழைநீராய் நீ சுழன்று நின்றபோது கூட
நான் பொறுத்துக்கொண்டேன்..!
மழைநீராய் தாவிக்குதித்தோட வழிதெரியாமல் தத்தளித்துக்கொண்ட நீ!
மழைநீர் சேகரிப்பின் அருமை தெரியாத
நான் மறந்துவிட்டேன்
இயற்கை வளங்களையெல்லாம் நேசிக்க தவறிவிட்டேன்..!
பழங்கால தத்துவங்களை எல்லாம்
நான் ஏற்கத் தவறிவிட்டேன்..!
முன்னோர்கள் காட்டிய வழிகளையெல்லாம்
நான் கண்டுகொள்ளாமல் விட்டேன்..!
இயற்கை வாழும் இடத்தில்
நான் நிலமாக நிலத்தை கூறுபோட்டு வாங்கிவிட்டேன்..!
நான் சுயநலகாரனாய் வாழ்ந்திட திட்டமிட்டேன்
என்றோ ஒருநாள் நீர் நெருப்பு நம்மையெல்லாம் அழித்திடும் என்பதை உணராது இருந்துவிட்டேன்.
இயற்கையே நம்மை ஒரு நாள் அழித்திடும் என்பதை
நான் அறிந்து கொண்டேன்
என்னென்றும் இயற்கைக்கு வழிகொடு…
பசுமையை நேசித்திடு…
உன் வாழ்க்கைக்கு வழிவகுத்துவிடு…!
…………………………..
சமூக ஆர்வலர்
ந.தெய்வராஜ், திருப்பூர்.
Leave a Reply