கேள்வி – பதில் : எப்பொழுதும் யோசித்துக் கொண்டே இருக்கும் மனதை ஒரு நொடியாவது யோசிக்காமல் இருக்கச் செய்யமுடியுமா? பல நேரங்களில் என்னுடைய தனிப்பட்ட யோசனைகள் காரணமாக என் ஆசிரியர் தொழிலில் பாதிக்கப்படுகிறேன்
கேள்வி : எப்பொழுதும் யோசித்துக் கொண்டே இருக்கும் மனதை ஒரு நொடியாவது யோசிக்காமல் இருக்கச் செய்யமுடியுமா? பல நேரங்களில் என்னுடைய தனிப்பட்ட யோசனைகள் காரணமாக என் ஆசிரியர் தொழிலில் பாதிக்கப்படுகிறேன்.
- பி. ஆனந்தி, ஆசிரியர்
பதில் : நம் இருதயத்தின் வேலை நம் உடலில் இரத்தத்தை உற்பத்தி செய்வது. அதைப்போல் நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் அதனுடைய வேலையைச் செய்துகொண்டே இருக்கின்றன. அதனை எவ்வாறு நிறுத்துவது என்று நம்மால் யோசிக்கமுடியுமா? அதைபோல் நமது உடலில் உள்ள கண்ணிற்குப் புலப்படாத நுட்பமாக இருக்கும் மனதின் வேலை அது இதுவரைச் சேகரித்த எண்ணங்கள், காட்சிகள், உணர்வுகளை அசைபோடுவதுதான்.
- ஓஷோனிக்ராஜ், மனநல ஆர்வலர்
அதனை நிறுத்திவிட்டு உங்களால் ஒருவேலையையும் செய்யமுடியாது. உங்களின் ஒட்டுமொத்த இயக்கமே அதன் வரைமுரையில்தான் உள்ளது. ஆனால் உங்களின் இந்தக் கேள்வியைப் புரிந்துகொள்ளமுடிகிறது. உங்களின் யோசனையே ஒருவித சலிப்பை உங்களுக்குத் தரும். உங்களின் அனுமதியில்லாமல் உங்கள் மனம் ஏதேதோ யோசனையில் ஈடுபட்டு நீங்கள் செய்துகொண்டிருக்கும் வேலையை பாதிக்கும்.
நீங்கள் மறக்க நினைக்கும் விஷயங்களையே மீண்டும் மீண்டும் நினைவுக்கு கொண்டுவந்து உங்களை கோபமூட்டும். வீட்டில் ஏற்பட்ட மனஸ்தாபங்களின் தொடர்ச்சி பள்ளியில் உங்களை அலைக்கழிக்கும். அதனால் இதற்கு வேறு ஏதேனும் உபாயம் இல்லையா என்பதாகக் கேட்கிறீர்கள். இந்த மனதை அடக்கியாள, கட்டிப்போட, கவனிக்க பழங்காலம்தொட்டே சித்தர்கள், ஞானிகள், சந்நியாசிகள் மற்றும் இன்னும் பலர் ஆன்மீகப் பக்கம் இருந்து முயற்சி செய்து அவர்களே கண்டுகொண்ட விஷயம் என்னவென்றால், மனதை உங்களால் நிறுத்த முடியாது.
உங்கள் மனதில் எழும் எண்ணங்களை கூர்ந்து கவனிப்பதன் மூலம் அந்த எண்ணங்களின் பாதிப்பில்லாமல் அவற்றைக் கடக்கமுடியும் என்பதேயாகும். உங்களின் மனதை உங்களின் எதிரியாகப் பார்க்காதீர்கள். அதுவே உங்களை உங்கள் வாழ்வில் இதுவரை அழைத்து வந்துள்ளது. அம்மனத்தை நீங்கள் எப்படிக் கையாளுகிறீர்கள் என்பதனைப் பொறுத்தே அது உங்களுக்கு சேவை செய்வதும் அல்லது நீங்கள் அதன் எண்ணக் கூட்டத்தில் சிக்கித் தவிப்பதும் இருக்கிறது. முயற்சி செய்யுங்கள். பலனடைய வாழ்த்துக்கள்.
கேள்வி – பதில் தொடரும்…
………………………………………………..
(இது பெற்றோர் – ஆசிரியர்களுக்கான வகுப்பறை)
இதை படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் ஆசிரியராகவோ, பெற்றோராகவோ இருந்தால் இதுபோன்று தங்களுக்கு எழும் கேள்விகளை எங்களுக்கு கீழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க காத்திருக்கிறார் மனநல ஆர்வலர் திருமிகு.ஓஷோனிக்ராஜ் அவர்கள். கேள்விகளை அனுப்ப : Email : puthuvaravunews@gmail.com / britosho@gmail.com
ஓஷோனிக்ராஜ்
மனநல ஆர்வலர்
நமது சிந்தனைக்கு காரணம் கற்பனையே. ஏன் என்றால் நாம் செய்யும் செயலில் சில தருணம் நம்மால் தீர்க்க முடியாத சூழ்நிலையில் தள்ளப்படுகிறோம் அத்தருனத்தில் நம் மனது குழப்பத்தில் தன்னிடம் இருக்கும் நம்பிக்கையை இழக்கிறோம்.
இச்சூழ்நிலையில்……….