சீனா :-
ஜின்பிங் சீனாவின் அதிபர், சீன கம்யூனிஸ்டு கட்சியின் நிறுவனர் மாவோ சேதுங்கிற்கு பிறகு மிகவும் சக்தி வாய்ந்த தலைவராக அறியப்படுகிறார். தனது வலுவை தொடர்ந்து நிலைநாட்டியும் வருகிறார். தொடர்ந்து 2-வது முறையாக அதிபர் பதவியில் நீடிக்கும் ஜின்பிங் ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சியின் தலைவராகவும் இருந்து வருகிறார். தனது அரசியலில் அன்பு அறநெறி சித்தாந்தங்களை மேற்கொண்டு மேலும் வலு சேர்க்கும் விதமான செயல்பட்டுவருகிறார்.
அதிபர் ஜின்பிங் அடுத்தகட்ட அரசியல் நிலைப்பாட்டை, சீன கம்யூனிஸ்டு கட்சியை மேலும் வலுப்படுத்தவும், வலுவான அரசியல் திட்டவடிவுகள் மற்றும் எதிர்காலத்தில் கட்சியின் அதிகாரத்தை நிலை நாட்டவும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் வாழ்க்கை பிரவேசம் மற்றும் தத்துவக்கோட்பாடுகள், சித்தாந்த அறநெறிக்கொள்கை அடங்கிய விஷயங்களை அந்நாட்டின் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேசிய பாடத்திட்டத்தில் அதிபர் ஜின்பிங் அவர்களின் அரசியல் பயணக்கோட்பாடுகள், அன்பு அறநெறிகொள்கை ஆகியவை பாடத்திட்டங்களில் வெளியிட்டு அறிமுகப்படுத்த உள்ளது.
அதன் ஒரு பகுதியாக தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான தேசிய பாடத்திட்டத்தில் அதிபர் ஜின்பிங்கின் அரசியல் சித்தாந்தம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
ஜிங்பிங் அதிபரின் அரசியல் பிரவேசம் மற்றும் ஜிங்பிங்கின் அரசியல் சித்தாந்த கோட்டுபாடுகள் ஆகியவை குறித்தும் அவரின் அன்பு மேலோங்கும் விதமாக பாடத்திட்டத்தில் இடம்பெறும் என தேசிய பாடநூல் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன கம்யூனிஸ்டு கட்சி மற்றும் அவரது அரசியல் வாழ்க்கை குறிப்பு மேலும் அவரது அரசியல் சித்தாந்த கோட்பாடுகள் அனைத்தும் புதிய பாடத்திட்டத்தில் தொடக்கப்பள்ளி புத்தகங்களில் அன்பு, அறம், ஒற்றுமை, நாட்டின் பாதுகாப்பு குறித்து அதில் இடம் பெற்று சிறப்பு சேர்க்கும்.