நடிகர் விவேக் மரணத்தில் நடந்தது என்ன, புதிய திருப்பம் : விசாரணை நடத்த தயாராகும் தேசிய மனித உரிமை ஆணையம்

Share Button

சென்னை :-

நடிகர் விவேக் மரணத்தில் நடந்தது என்ன? மரணத்திற்கு காரணம் என்ன? என பல்வேறு கோணங்களில் விசாரணைக்குத் தயாராகும் தேசிய மனித உரிமை ஆணையம். புதிய திருப்பம் ஏற்பட்டுள்ள நடிகர் விவேக் மரணச் செய்தியை விசாரணை செய்ய தயாராகிறது மனித உரிமை ஆணையம்.

விசாரணைக்குத் தயாராகும் தேசிய மனித உரிமை ஆணையம் :

நடிகர் விவேக் மரணம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. திடீர் மாரடைப்பு ஏற்பட்டு நடிகர் விவேக் காலமானார்.

கடந்த ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி நடிகர் விவேக் திடீர் மாரடைப்பால் காலமானார். அவரது இந்த திடீர் மரணச் செய்தி தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது, உலகத்தில் உள்ள விவேக் ரசிகர்களுக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கொரோனா தடுப்பூசி :

இதற்கு முன்பு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்தவர் நடிகர் விவேக். அவ்வகையில், கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொண்டு மக்களுக்கிடையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தடுப்பூசையை செலுத்திக்கொண்டு மக்களிடைய விழிப்புணர்வை ஏற்படுத்திய நடிகர் விவேக், தடப்பூசி செலுத்திக்கொண்ட இரண்டு நாட்கள் கழித்து மாரடைப்பு ஏற்பட்டு காலமானார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

தடுப்பூசி செலுத்திக்கொண்ட மறுநாள் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக், அதற்கு அடுத்த நாள், ஏப்ரல் 17 அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

இதனிடையே, கொரோனா தடுப்பு ஊசி செலுத்தியதால் விவேக் மரணமடைந்ததாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் புகார் மனு அளித்தார். இந்த புகார் மனுவை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Comments are closed.