நியாயவிலை கடைகளில் உள்ள சிறப்பு பொது விநியோகத் திட்டத்தை நீட்டிப்பு தமிழக அரசு அறிவிப்பு

Share Button

சென்னை :-

நியாயவிலை கடைகளில் உள்ள சிறப்பு பொது விநியோகத் திட்டத்தை நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பு!

கொரோனா பரவல் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பொருளாதாரம் சரிந்து உள்ள நிலையில் தமிழக அரசு ரேஷன் கடைகளில் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்தி வந்தது. தற்போது இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ அரசு அறிவித்துள்ளது.

கொரோனா காலகட்டத்தில் நியாயவிலை கடைகள் மூலமாக வழங்கப்பட்ட பொருட்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. மக்களின் வாழ்வாதாரம் இழந்த நிலையில் பொது விநியோகம் மூலம் பொருட்களை வழங்கப்பட்டது

ரேஷன் கடைகளில் பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் வினியோகம் :

ரேஷனில் மானிய விலையில் ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் டிசம்பர் வரை தரப்படும் என சிறப்பு பொது விநியோகத் திட்டத்தை நீட்டித்து தமிழ்நாடு அரசாணை வெளியிடப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு உத்தரவு :

இத்திட்டத்தின் கீழ் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், மாதம் ஒன்றுக்கு 1 கிலோ துவரம் பருப்பு, 1 லிட்டர் சமையல் எண்ணெய் மானிய விலையி்ல் விநியோகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Comments are closed.