ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்க தமிழக அரசு நடவடிக்கை

Share Button

சென்னை :-

ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்க தமிழக அரசு நடவடிக்கை

இனி வரும் காலங்களில் நியாய விலை கடைகள் மூலமாக தரமான அரிசி வழங்க தமிழக அரசு நடவடிடககை எடுத்துள்ளது. இத்தகவலை சட்டப்பேரவையில் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் இத்தகவலை தெரிவிக்கப்பட்டது.

விரைவில் தமிழ் நாட்டில் ரேஷன் கடைகள் மூலம் தரமான அரிசி வழங்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது தமிழ அரசு. மக்கள் நல்ல தரமான அரிசி வழங்கி நல்லாட்சி வழங்குவதே எங்களின் நோக்கம் எனவும் குறிப்பிட்டார்.

ரேஷன் கடைகளில் தரமான அரிசி

தமிழ்நாட்டில் தற்போது 2 கோடியே 13 லட்சத்து 80 ஆயிரத்து 112 குடும்ப அட்டைகள் இருப்பதாக கூறினார். இவற்றில் முன்னுரிமை பெற்ற குடும்ப அட்டைகளை வசதி படைத்த சிலர் பெற்றிருப்பதும், முன்னுரிமை அற்ற குடும்ப அட்டைகள் வசதி இல்லாதோருக்கு வழங்கப் பட்டிருப்பது தெரிய வந்திருப்பதாக தெரிவித்தார் துறையின் அமைச்சர் சக்கரபாணி.

தமிழக அரசு ஆய்வு, தரமான அரிசி வழங்க உத்தரவு

இது பற்றி ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதி அளித்துள்ளார். பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் தரமான அரிசியை வழங்க தமிழ்நாடு அரசு உறுதி செய்துள்ளதாகவும் ரேஷன் கடைகளுக்கு அரிசி விநியோகம் செய்யும் ஆலைகள் இந்த மாதம் 31-ஆம் தேதிக்குள் கலரிங் என்று அரிசியை தரம் பிரிக்கும் இயந்திரத்தை நிறுவ உத்தரவிட்டுள்ளதாகவும் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

மக்களின் நலனில் என்றும் துணை நிற்போம் என்றும் தெரிவித்தார்.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Comments are closed.