ஓடிப் போய்
தொப்பென விழுந்தேன்
கட்டி அணைத்தேன்
கையை உதறி விட்டு
கடுகடுவென பேசினான்
தொடாதே…..
என்னைத் தொடாதே
என்மீது உனக்கு காதலும் இல்லை
ஒரு கருமமும் இல்லை
வேசம் ….
எல்லாமே வேசம்…
நான் எப்படித்தான்
உன் காலில் விழுந்து கிடந்தாலும்
உன் கணவன் தான்
உனக்கு முக்கியம்
உன் கணவன் இருந்தால்
என்னைக் கண்டு கொள்ளாத நீ
உன் கணவன் இல்லாத போது மட்டும்
கட்டி கட்டி அணைக்க வருகிறாயே
கையை எடு என்றது
என் கையில் இருந்த
அந்த தலையணை…
கவிஞர் கவிசெல்வா திருச்சி
Leave a Reply