பாலாஜி மேடைப் பேச்சாளன் அல்ல : ஆனால், அவனுடைய பணிவும், பண்பும், மனப்பூர்வமான ரசனையும் மேடைக்குத் தேவை – இசைக்கவி ரமணன்!
‘இசைக்கவியைக் கேளுங்கள்’ நிகழ்ச்சி இன்று மிகச் சிறப்பாகவும் திருப்தியாகவும் அமைந்தது. எனது சேகரத்திலிருந்த , Venkateswaran Anantaramaseshan Taruvai ரமணனின் 35 லிருந்து 40 வருடங்கள் வரை பழமையான பாடல்களும் கவிதைகளும் உரைநடைப் பகுதிகளும் இன்றைய நிகழ்ச்சியில் கையாளப்பட்டன. பல வருடங்களுக்குப் பிறகு ரமணனின் குரலில் இத்தனை பாடல்களைக் கேட்டது அளவற்ற மகிழ்ச்சியை அளித்தது. 40 வருடங்கள் பின்னோக்கிச் சென்ற ஒரு பயண அனுபவத்தை அளித்தது அந்தக் கணங்கள்.
இத்தகைய ஒரு அரிய வாய்ப்பையும் நேரத்தையும் அனுபவிக்க வழி அமைத்துத் தந்த கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் பாரதிய வித்யா பவன் நிறுவனங்களுக்கும், நண்பன் ரமணன் மற்றும் அனுராதா ரமணன் (Anuradha Venkateswaran) ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றி. திரளாக வந்திருந்து நிகழ்ச்சியைப் பெருமைப்படுத்திய, பாராட்டிய அனைத்து நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் (Ravi Ranganathan Sridharan Brs Saranya Francis Anusha Suresh Susila Sridharan Viji Vijay Vidhya Shankar Sidharth Chandrashekar) முகநூல் நண்பர்களுக்கும் (Manthiramoorthi Alagu, Ram Sarasuram Sridhar Sathyam) எனது மனமார்ந்த நன்றி. சிறப்பு நன்றி, அத்தனை அழகாகப் பாடி அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்ற, என் நண்பன் இசைக்கவி ரமணனுக்கு!
Leave a Reply