சென்னை கே.பி.பார்க் குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்களின் பிரச்சினைகளை எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் நேரில் சென்று கேட்டறிந்தார்

Share Button

சென்னை :-

சென்னை புளியந்தோப்பு கே.பி. பார்க் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை நேற்று பார்வையிட்டார் விடுதலைச் சிறுத்தகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன். தண்ணீர் வசதி இல்லை, மின் தூக்கி இல்லை, அதிகாரிகள் 1.5 லட்சம் பணம் செலுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள் என மக்கள் தங்களின் பிரச்சினைகளையும், பல்வேறு குறைகளையும் அவரிடம் எடுத்துக் கூறினார்கள்.

அதிகாரிகளிடம் பேசினேன் கட்டிடம் உறுதியாகத்தான் இருக்கிறது, மேலே பூசியிருக்கும் எம்சேண்ட் சரியில்லாததால் உதிர்கிறது. அதனை உடனடியாக சீரமைக்கிறோம் எனவும் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என அதிகாரிகள் தெரிவித்ததாக கூறினார். 4 நாட்களில் தண்ணீர் வசதி மற்றும் மின் தூக்கி அமைக்கப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.

400 சதுரடி உள்ள ஒரு வீட்டுக்கு 13 லட்சம் செலவாகிறது. ஒன்றிய அரசு 1.5 லட்சமும் மாநில அரசு 6 லட்சமும் வழங்கியிருக்கிறது. தற்போது மாநில அரசு மேலும் 4 லட்சம் வழங்கி மொத்தம் 10 லட்சம் வழங்கியிருக்கிறது. மீதமுள்ள 1.5 லட்சத்தை மக்கள் கட்ட வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அந்த 1.5லட்சம் கட்டணத்தையும் அரசே செலுத்த வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார் தொல்.திருமாவளவன். தண்ணீர் வசதியும் மின் தூக்கியும் உடனடியாக சரிசெய்து தரும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Comments are closed.