ஜெர்மனி அதிபருடன் ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார்

Share Button
புதுடெல்லி :-
ஜெர்மனி அதிபருடன் ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து பிரதமர் மோடி நேற்று ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
ஆப்கானிஸ்தானில் நடந்து வரும பிரச்சினை குறித்து அப்போது இரு தலைவர்களும் நிலவரங்களை குறித்து உரையாடினார்கள். அங்குள்ள கள நிலவரம் மற்றும் அதனால் பிராந்தியம் மற்றும் உலகம் சந்திக்கும் சவால்களை குறித்தும் தொலைபேசியில் இரு தலைவர்களும் பேசினார்கள்.
தலிபான்களால் எழுந்துள்ள பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு இடையே, அங்கே சிக்கியிருக்கும் மக்களை மீட்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அவர்கள் ஒப்புக்கொண்டனர். மேலும், அங்குள்ள மக்களின் நலன் கருதியும், பாதுகாப்பை ஏற்படுத்தும் வகையிலும் பல்வேறு ஆலோசனைகளை பகிர்ந்துகொண்டுள்ளனர்.
மெர்கலுடனான இந்த பேச்சு குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் தளத்தில், ‘ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கலுடன் இன்று மாலையில் பேசினேன் என்று நேற்றை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அப்போது ஆப்கானிஸ்தானின் சமீபத்திய நிலவரங்கள் உள்பட இருதரப்பு பிராந்திய பிரச்சினைகள் குறித்து விவாதித்தோம் என பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Comments are closed.