ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், Dr. தீபா சத்யன், IPS சேர்வோம்-எழுவோம் (Reach & Raise) என்ற ரோந்து முறையை துவக்கி வைத்தார்

Share Button

இராணிப்பேட்டை :-

இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், டாக்டர். தீபா சத்யன், இ.கா.ப., அவர்கள் 04.09.2021 காலை 10.30 மணி அளவில் ஆற்காடு VP பேலஸ் மஹாலில், காவல்துறைக்கும் மக்களுக்குமான நல்லுறவை மேம்படுத்தும் விதமாக சேர்வோம் – எழுவோம் (Reach & Raise) என்ற ரோந்து முறையை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திரு. P. முத்துக்கருப்பன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், CCW, துணை காவல் கண்காணிப்பாளர்கள், திரு. M. பிரபு, திரு. S. புகழேந்தி கணேசன் மற்றும் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் ரோந்து காவல் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ரோந்து முறை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர், டாக்டர். தீபா சத்யன், இ.கா.ப., அவர்கள் கூறியதாவது.

சேர்வோம் – எழுவோம் ( Reach & Raise )

இராணிப்பேட்டை மாவட்ட அனைத்து காவல் நிலையத்திற்கு உட்பட்ட எல்லைகள் முழுவதும் 55 ரோந்துகளாக பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் ரோந்து காவலர்கள் ரோந்து சென்று வருகின்றனர். இந்த ரோந்து முறை மூலம் இருந்த காவலர்கள் அவர்களை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஒரு நாளைக்கு குறைந்தது 10 நபர்களோடாவது நேரடி தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு, அவர்களின் இருப்பிடம், குடும்ப விவரங்களை அறிந்து கொள்வதோடு அவர்களுக்கு ரோந்து முறை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தொடர்பு எண்கள் அடங்கிய துண்டு பிரசுரம் அளித்து அவர்களிடம் நல்லுறவை ஏற்படுத்தி, அந்த பகுதிகளில் நடைபெறும் குற்ற சம்பவங்கள், குற்றவாளிகள் குறித்த தகவல்கள், அனைத்து விதமான சமூக பிரச்சனைகள், ஆதரவற்றோர் குறித்த விவரங்கள், இளைஞர்களை பாதிக்கக்கூடிய விஷயங்கள் என அனைத்து விதமான தகவல்களும் உடனுக்குடன் பெற்று குற்றங்கள் நிகழாத வண்ணம் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், மேலும் இதன் மூலம் பொதுமக்களுக்கும், காவல்துறைக்கும் இணக்கமான நல்ல உறவு ஏற்படுத்த ஏதுவாக இருக்கும் என தெரிவித்தார்.

காவர்களுக்கும் பொதுமக்களுக்கும் சிறப்பு பரிசு

மேலும் சிறப்பாக செயல்படும் காவலர்களுக்கும், சிறந்த தகவல் கொடுக்கும் பொதுமக்களுக்கும் பரிசுகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *