சினிமாவிலும், சினிமாவைத் தவிர்த்து வெளி உலகிலும் சமூக கருத்துக்களை அவ்வப்போது பேசி வரும் நடிகர் விஜய் சேதுபது, தற்போது சாதிப் பிரச்சனைகளுக்கான தீர்வு குறித்துப் பேட்டி கொடுத்திருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சி என ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்திழுத்துள்ள விஜய் சேதுபதி, அடிக்கடி சமூகத்தில் நடக்கும் சில அவலங்களை எடுத்துக் கூறி அதற்கான தீர்வுகள் என தன் பார்வையில் தோன்றும் கருத்துக்களை ஊடகங்களிலும், மாணவர்கள் மத்தியிலும் பகிர்ந்து கொள்வது உண்டு.
அந்த வகையில் சீனு ராமசாமி இயக்கத்தில் தான் நடித்துக் கொண்டிருக்கும் மாமனிதன் படப்பிடிப்பு தளத்தில் சாதிப் பிரச்சனைக்கான தீர்வு குறித்து தனது பார்வையை கேரள பத்திரிகை ஒன்றிடம் பகிர்ந்துள்ளார்.
அதில் “சாதியை முறியடிக்க அனைவரும் கல்வியில் முன்னேற வேண்டும் என்றும் காதல் திருமணம் இந்தப் பிரச்சனைக்கு மிக முக்கிய தீர்வாக இருக்கும்” என்றும் கூறியுள்ளார்.
சாதிப் பிரச்சனை குறித்து இவர் அளித்த இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் பலரது கவனத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜாதி சான்று கேட்பதும், வழங்குவதும் தவிக்கப்பட வேண்டும்.
ஆண் – பெண் – திருநங்கை ஆகியவை மட்டுமே மனித இனம் .மனித இனத்திற்கு ஜாதி என்பது ,உறவு முறை திருமணம் மற்றும் குடும்ப வைபவ காரியங்கள், விழாக்களுக்கு மட்டுமே பயன்படும் .
திருச்சி சுவாமிநாதன் ;contact >790 408 1457