4 மாதங்களுக்கு பிறகு தியேட்டர்கள் இன்று முதல் திறப்பு, ரசிகர்கள் வரவேற்பு

Share Button
அரக்கோணம், இராணிப்பேட்டை :-
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல மாதங்களாக மூடிய திரையரங்குகளை அரசு விதித்த தளர்வுகளின் அடிப்படையில் இன்று முதல் திறக்கப்படுகிறது.
இதற்கிடையே, ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து செப்டம்பர் 6 ஆம் தேதி வரை தமிழக அரசு நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தது. அத்துடன் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. கண்டிப்பாக திரையரங்கங்கள் இந்த உத்தரவை பின்பற்றவேண்டும் என தமிழக அரசு கேட்டுகொண்டுள்ளது.
நான்கு மாதங்களுக்கு மேலாக மூடப்பட்ட தியேட்டர்கள் இன்றுமுதல் திறக்கப்படுகின்றன என்றாலும், தியேட்டர்களுக்கு மக்கள் ஆர்வத்துடனும் கொரோனா அச்சுறுத்தல்கள் இன்றி வருவார்களாக என்பது பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற உத்தரவு, ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்ற உத்தரவு அரசு குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதையொட்டி, தியேட்டர்களில் நேற்று இருக்கைகள், டிக்கெட் கவுண்ட்டர் உள்ளிட்ட இடங்களில் கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட தூய்மை பணிகள் மும்முரமாக நடந்தன. மக்கள் அமர்ந்து பார்க்கும் இருக்கைகள் மற்றும் கழிவறைகள் போன்ற இடங்களையும் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள்.
அதேபோல பூங்காக்கள், அங்கன்வாடி மையங்கள், நீச்சல் குளங்கள் விளையாட்டு பயிற்சிக்கு கூடம், தங்கும் விடுதிகள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் பார்கள் போன்றவையும் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதுமுள்ள தியேட்டர்களின் தூய்மைப்பணிகளை நேற்றுமுதல் தீவிரமாக செயல்பட்டுகிறார்கள்.
கடற்கரை, பூங்காக்கள், தியேட்டர்கள் கேளிக்கை விடுதிகள், பார்கள் போன்ற அனைத்து இடங்களும் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புகின்றன.
சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சி பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எது எப்படியோ மக்களாகிய அனைவருமே விழிப்புணர்வுடன் தியேட்டர்களுக்கு சென்று பாதுகாப்பு வசதிகளுடன் திரைப்படங்களை பார்க்கவேண்டும். முதலில் நம்முடைய பாதுகாப்பு உறுதி செய்தி பின்னரே மக்கள் வெளியே செல்ல வேண்டும்.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Comments are closed.