ஆண்டாளின் நாலாயிர திவ்ய பிரபந்தம் படிக்க நேரிட்ட போது!

Share Button
என் ஆண்டாளே….
எங்கே இருக்கிறாய்…?
நாலாயிர திவ்ய பிரபந்தம் உனக்காக எழுதுகிறேன்…
நான்கு நிமிடம் என்னோடு பேசுவாயா..?
கடல் கடந்து நீ போனாய்..
நானோ..!
கவிதை கடந்து உனை தொழுகிறேன்..!
எனை ஆண்டாளே…!
என் ஆண்டாளே…!
நான் யாரையும் காதலிக்கவில்லை என்கிறேன்…
இவர்களோ நம்ப மறுக்கிறார்கள்…
நான் காதலிப்பது கவிதைகளை
மட்டும் என்பதை
நான் எப்படி புரிய வைப்பேன்…
எனை ஆண்டவளும் நீ தான்,,,
என் ஆண்டாளும்
நீ தான் என்பதை
இவர்களுக்கு எப்படி புரிய வைப்பேன்…!
நகல் எடுத்தாலும்
மாறாத அசல் நீ…!
உன்னிடம் “சக்தி” இருந்தாலும்,
உந்தன் சந்நிதி – நான் என்பதை
எப்படி புரிய வைப்பேன்..!
உன் ஓரப் பார்வையில்
உலகம் சொன்னாய்…
உன் ஈரப் பார்வையில்
இதயம் கிழித்தாய்..
நானோ ஒன்றும் இல்லையென்றேன்,,,
நீயோ ஒன்றுக்குள்
ஒன்று தேடினாய்…
என் ஆண்டாளே….
எங்கே இருக்கிறாய்…
நீ இல்லா வாழ்வு
நிஜம் இல்லா பொய்யடி…
உன் கை பிடித்தேன்..
எனை கவிஞன் ஆக்கினாய்..
உன் விரல் பிடித்தேன்
எனை வீணை மீட்ட வைத்தாய்…
வா..!
இல்லையெனில்
வழி சொல்
இல்லாத ஊருக்கு…
……………………………………………………………………………………….
தேசிங்கு ராஜா
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *