திருப்பூர் அனுப்பர்பாளையம் பாத்திர சொசைட்டி சிகனல் அருகே கர்பிணி பெண் முதல் பல பொது மக்களை கற்கலாலும், கண்ணாடி பாட்டில் கொண்டு அடித்து துன்புறுத்திய வாலிபரை பொது மக்கள் பிடித்து அடித்து உதைத்து 15 வேலம்பாளையம் காவல் ஆய்வலரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதன் விபரம் வருமாறு இவர் பெயர் கூறவில்லை ஊர் திருநெல்வேலியை சார்ந்தவர் எனவும் இந்த வாலிபருக்கு அப்பா, அம்மா உறவுகள் யாவும் இருக்கிறார்களாம். மேலும் இவரது உறவினரான இவர் இப்பகுதியில் ஸ்டிக்கர் கடை வைத்திருப்பதும் தெரிய வரும்… மேலும் அவரும் பல முறை தன் கடைக்கு வர வேண்டாம் என திட்டியும் அனுப்பி வைத்துள்ளார் என்றும் பிறகு இப்பகுதியிலையே சைகோ மாதரியே சுற்றி வருவார்.
இதனைத் தொடர்ந்து இன்று காலை 10 மணி சுமார்க்கு அனுப்பர்பாளையம் பகுதி வீதிக்குள் சென்று வாய்க்கு வந்தவாறு தகாத வார்த்தையில் பேசி கர்ப்பிணி, வயதான பாட்டி, குழந்தைகள் என பலரையும் கற்கள் கொண்டு அடிக்க முற்பட்ட இந்த வாலிபரை பொது மக்கள் மடக்கிப் பிடித்து என்ன ஏதுன்னு விசாரிக்கும் போது இவர் மது போதை, கஞ்சா, போன்ற போதை பொருளுக்கு அடிமையானதால் அவ்வப்போது இரவு நேரத்தில் வழிபறி தொழில் ஈடுபடுவது எனவும் தெரிய வருவது அறிந்து அப்பகுதி பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வாலிபரை 15 வேலம்பாளையம் காவல் ஆய்வளரிடம் பாதுகாப்புடன் ஒப்படைக்கபட்டனர்.
இதனை ஏற்றுக் கொண்ட 15 வேலம்பாளையம் காவல் ஆய்வாளர் அவர்கள் அந்த வாலிபர் மீது தக்க நடவடிக்கை எடுத்து விசாரிப்பதாகவும் கூறியுள்ளார்.
Leave a Reply