தமிழகம் முழுவதும் 75 மையங்களில் அரசின் நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி இன்று தொடங்கியது. 413 மையங்களில் பயிற்சி வழங்கப்பட வேண்டிய நிலையில் 75 மையங்களில் மட்டுமே பயிற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 9800 மாணவர்களுக்கு தனியார் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது .
ஆனால் நீட் மையங்களில் செய்து தரப்படும் கணினி வசதிகள், இணைய வசதிகள் உள்ளிட்டவற்றிற்காக, பள்ளிக்கல்வித்துறையின் 20 கோடி ரூபாய் நிதியுதவி கிடைக்கப்பெறாததால் அரசின் இலவச நீட் பயிற்சி மையங்கள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நிதிப்பற்றாக்குறையால் மார்ச் 25ம் தேதி முதல் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவில்லை என்றும் அறிவித்தது.
இந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் 75 மையங்களில் அரசின் இலவச நீட் தேர்வுக்கான பயிற்சி தொடங்கியது. ஆனால் 413 மையங்களில் செயல்படவேண்டிய நிலையில் வெறும் 75 மையங்களில் மட்டுமே இன்று பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply