தமிழ்நாட்டில் மிகவும் சுதந்திரமான, நியாயமான, அமைதியான முறையில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்கள் நடத்த வேண்டும் என்ற வகையில் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை நாட்களில் மது பானங்கள் விற்பனை செய்ய தடை விதித்தும், பார்களை மூடவும் அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
இந்த உத்தரவுக்கு ஏற்றவகையில் தமிழ்நாடு மாநில நுகர்பொருள் வாணிப கழகத்தின் மேலாண்மை இயக்குனர் ஆர்.கிர்லோஷ் குமார் பிறப்பித்துள்ள உத்தரவில் “தமிழக அரசின் உத்தரவுக்கு ஏற்ப தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மதுபான கடைகளும், அதோடு இணைக்கப்பட்டுள்ள பார்களும் வருகிற 16, 17, 18 ஆகிய நாட்களிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான மே மாதம் 23ந்தேதியும் மூடப்படும். இந்த உத்தரவுப்படி அனைத்து மதுபான டெப்போக்கள், கடைகள் மற்றும் பார்கள் மேற்சொன்ன நாட்களில் அடைக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.
Leave a Reply