குழந்தையுடன் இருக்கும் கைதிகளுக்கு ஏ _ கிளாஸ் சிறை :
வேலூர், சிறையில் குழந்தையுடன் உள்ள பெண் கைதிகளுக்கு ஏ-கிளாஸ் வகுப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி அசுதோஷ் சுக்லா தெரிவித்தார். தமிழக சிறைகளில் பணியாற்றும் காவலர்களுக்கு 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புத்தாக்க பயிற்சி வழங்கப்படுகிறது. அதன்படி, வேலூர், புழல்-3, கோவை, திருச்சி, சேலம், பாளையங்கோட்டை, புதுக்கோட்டை, கடலூர், மதுரை உள்ளிட்ட 10 சிறைகளில் பணியாற்றும் பெண் சிறைக்காவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி வேலூரில் கடந்த 1ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 4வது நாளாக நேற்று நடந்த பயிற்சி வகுப்பில் சிறைத்துறை டிஜிபி அசுதோஷ் சுக்லா பேசியதாவது
சிறையில் குழந்தைகளுடன் உள்ள பெண் கைதிகளுக்கு ஏ-கிளாஸ் வகுப்பு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதற்கான சுற்றறிக்கை விரைவில் அனுப்பப்படும். அதோடு சிறைக்குள் குழந்தைகளுக்கு என கார்டூன் படங்கள் ஒளிபரப்பவும், விளையாட்டு உபகரணங்கள், சைக்கிள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்
மாதந்தோறும் அனைத்து கைதிகளுக்கும் மருத்துவ பரிசாதனை செய்யவும், மத்திய சிறைகள் மற்றும் பெண்கள் சிறையில் மாதத்திற்கு ஒரு ஞாயிறு கிழமைகளில் குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் சந்தித்து பேசிவதை மாற்றி, மற்ற நாட்களிலும் பெண்கள் சிறையில் உள்ள கைதிகளை பார்க்க வரும் குழந்தைகளை நேரில் சந்தித்து பேச அனுமதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் கைதிகளின் மன அழுத்தம் குறைக்க முடியும்’ இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து பயிற்சியில் கலந்துகொண்ட பெண் சிறை காவலர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இதையடுத்து வேலூர் மத்திய சிறைக்கு சென்று ஷூ தயாரிப்பு கூடத்தை ஆய்வு செய்தார்.
Leave a Reply