சட்டசபை காலியிடம் 22 ஆனது!
by Web Team ·
மக்களவை தேர்தலுடன் 21 சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளை விடுத்து 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சூலூர் எம்.எல்.ஏ. கனகராஜ் மரணம் காரணமாக தற்போது தமிழக சட்டசபையில் காலியாக உள்ள இடங்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்து உள்ளது. 2016ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு திருப்பரங்குன்றம் எம்எல்ஏ சீனிவேல் இறந்தார்.
அதன் பின்னர் நடந்த இடைத்தேர்தலில் போஸ் வெற்றி பெற்றார். தற்போது அவரும் மரணமடைந்துள்ளார்.
அதேபோல, ஆர்.க.நகர் தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஜெயலலிதா, திருவாரூர் எம்எல்ஏ கலைஞர் கருணாநிதி ஆகியோர் மரணமடைந்தனர். தற்போது சூலூர் எம்எல்ஏ மரணமடைந்தார். இதனால் கடந்த 3 ஆண்டுகளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் அதிமுகவின் பலம் 110ஆக இருந்தது. அதன் பின்னர் ஓசூர் எம்எல்ஏவின் பதவி பறிக்கப்பட்டது. தற்போது எம்எல்ஏ கனகராஜ் மரணத்தால் அதிமுகவின் பலம் 108 ஆக குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி காலியிடம் 22ஆக உயர்ந்துள்ளது. இதனால் தமிழக சட்டப்பேரவையில் உறுப்பினர்களாக 212 பேர் உள்ளனர். அதில் மெஜாரிட்டிக்கு 107 பேர் போதும். அதிமுகவில் தற்போது 108 பேர் உள்ளனர்.
இதனால் தற்போதைய நிலையில் அதிமுக அரசு தப்பியுள்ளது. ஆனால் 18 தொகுதிக்கான இடைத் தேர்தல் நடைபெறுகிறது. அதில், இதனால் அதிமுக 18 தொகுதிகளில் குறைந்தது 8 தொகுதிகளிலாவது ஜெயிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
Leave a Reply