அமெரிக்காவின் புளோரிடாவில் விஷம் சுரக்கும் தேரைகளின் படையெடுப்பா’ல் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். பாம் பீச் கார்டன்ஸ் பகுதியில் குடியிருப்புக்களுக்கு அருகே உள்ள குளத்தில் பஃபோ டோட்ஸ் (Bufo Toads) எனும் தேரைகளின் படையெடுப்பு அதிகரித்துள்ளது. அவற்றில் இருந்து சுரக்கும் விஷம், நாய், பூனை உள்ளிட்டவற்றின் உயிரைப் பறிக்கும் என்பதோடு, மனிதர்களின் தோலில் அலற்சியை ஏற்படுத்தி தடிப்பு, சொறி ஆகியவற்றை ஏற்படுத்தும். வீட்டின் கதவைத் திறந்து வைக்க முடியவில்லை என்றும், வீட்டை விட்டு வெளியேறவே அச்சமாக இருப்பதாகவும் அப்பகுதி வாசிகள் தெரிவித்துள்ளனர். தேரைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அருகில் உள்ள பகுதிகளுக்கும் பரவ வாய்ப்புள்ளது. எனவே, தேரைகளைப் பிடிக்கும் வாகனங்கள் தீவிர வேட்டையில் களமிறங்கியுள்ளன.
Leave a Reply