திருவண்ணாமலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி அவர்களுடன் ஒரு சிறப்பு நேர்காணல்: லட்சியத்தை அடையும் வரை போராடும் குணம் இளைஞர்களுக்கு வேண்டும்! கலெக்டர் பேச்சு

Share Button
மனதுக்கு பட்டதை நியாயம் என்று நேர்மையாக செய்து வரும் கலெக்டர்கள் எப்போதுமே மக்களின் இதயத்துக்கு நெருக்கமாவது உண்டு. அவ்வகையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமியும் மக்களிடையே அண்மை காலமாகவே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார். அவரின் சின்சியர் செயல்களுக்காக பலரும் அவரை புகழ்கின்றனர். புதுவரவு மாத இதழ் மற்றும் புதுவரவு இணையதள செய்தி சேனலுக்காக நேர்காணல் செய்ய அவரை அனுகியபோது, புன்னகையுடன் எங்களை வரவேற்றார். இதோ அவருடனான ஒரு சிறப்பு நேர்காணல்.

1. தங்களது குடும்பம் மற்றும் பூர்வீகம் குறித்து?

என்னுடைய சொந்த ஊர் திருச்சியில் உள்ள மேலகல்கண்டார்கோட்டை. அப்பா அரசு பள்ளி ஆசிரியர். அம்மா சொந்தமாக தேங்காய் வியாபாரம் செய்பவர். ஒரு அண்ணன் ஒரு தம்பி. நாங்க கஷ்டப்பட்டு உழைப்பது நம் லட்சியத்திற்காக முயற்சிக்கும் போது குடும்ப சூழ்நிலைகள் மோசமானதாக இருக்கும் பட்சத்திலும் என்னை பெற்றோரும், உறவினர்களும் வேலைக்கு போகும்படி கட்டாயப்படுத்துவார்கள். இதனால் நான் எந்த குடும்ப நிகழ்ச்சிகளுக்கும் வெகு காலம் போகாமல் இருந்தேன்.

2. தங்களது மாணவப்பருவம் எப்படிப்பட்டது?

என்னுடைய மாணவப்பருவத்தில் 8வது வரை அரசுப்பள்ளியில் தான் படித்தேன். 9, 10 எல்லாம் உதவிப்பெரும் பள்ளியில் படித்தேன். அடுத்து டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாலிடெக்னிக் படித்தேன். மதுரவாயல் எம்ஜிஆர் இன்ஜினியரிங் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்தேன்.
திருச்சி ஹோலி கிராஸில் டிப்ளமோ இன் பப்ளிக் அட்மினிஸ்டேசன் ஒரு வருடம் படித்தேன். அதன் பிறகு தான் சிவில் தேர்வு படித்தேன். ஐஏஎஸ் வருவதற்கு குருப் 1 இல் தேர்வாகி அதன் மூலம் புரமோசனில் ஐஏஎஸ் ஆனேன். வெளியூரில் தான் அதிகம் இருந்தேன். அதனால் என் லட்சியத்தில் மட்டுமே குறியாக இருந்தேன். இதனை வென்று வந்தவர்கள் தான் இன்றைக்கு முன்னேறி இருக்கிறார்கள்.
முதல் இரண்டாவது சிவில் சர்வீஸ் முயற்சிக்கு அப்பா, அம்மா எனக்ரேஜ் அதிகம் இருக்கும் ஆனால் அதன் பிறகு அவைகள் குறைய ஆரம்பிக்கும். மூன்றாவது முயற்சியில் தம்பி வேற வேலை பாரு என்பார்கள்.ஆனால் நம் லட்சியத்தில் நமக்கு நம்பிக்கை இருந்தால் இந்த பிரச்சனைகளில் இருந்து மீண்டு வரவேண்டும்.

3. உங்களைப் பாதித்த ஆசிரியர்கள்?

நான் அசாரதண படிப்பாளி எல்லாம் கிடையாது. நான் ஆவ்ரேஜான ஸ்டூடண்ட் தான். எனக்கு பள்ளி பருவத்தில் ரொம்ப பாதித்த ஆசிரியர் என்றால் அது பி.டி வாத்தியார் தான். அவர் என்னை அடித்து, அதிகம் கண்டித்து உருவாக்கினார். மேலும் ஜானகி,சித்ரா போன்ற ஆசிரியைகள் கூட என்னை அதிகம் அக்கறை கொடுத்து உருவாக்கினார்.

4. எப்படிப்பட்ட நண்பர்களை பெற்றிருக்கிறீர்கள்?

எனக்கு நண்பர்கள் பள்ளிப்பருவத்தில் பெரிதில் கிடையாது. ஆனால் கல்லூரி படிக்கும் போது இருந்த நண்பர்கள் எனக்கு ரொம்ப உதவியாக இருந்தார்கள்.  இப்போது கலெக்டராக இருக்கும் என்னுடைய நண்பர்கள் பலருக்கு பணம் கொடுப்பதை கூட நிறுத்தினார்கள். பணம் இல்லாமல் அனுப்ப முடியாத சூழ்நிலையிலும் சில பெற்றோர்கள் இருந்தார்கள்.ஆனால் இப்போது அந்த மாணவர்கள் லட்சியத்தை அடையும் வரை போராடி அதில் வென்றிருக்கிறார்கள்.

5. உங்கள் பெற்றோரிடம் நீங்கள் கற்றுக்கொண்டது?

என்னுடைய அம்மாவிடம் இருந்து கடின உழைப்பை கற்றுக்கொண்டேன். அவர்கள் தான் என் கடின உழைப்புக்கு வழிகாட்டி. ரொம்ப வசதியான குடும்பத்தில் பிறந்த அவர்கள்.உழைத்து முன்னேற வேண்டும் என சந்தையில் கடை வைத்து உழைத்தார்கள். அந்தக்காலத்தில் ரொம்ப சம்பாதித்து நிலம் வாங்க முற்பட்டனர்.
ஆனால் என் அம்மா எங்களை படிக்க வைப்பதில் முனைப்பு காட்டினார்கள்.அந்த முதலீடு என்பது இப்போது யார் எல்லாம் சொத்தை வாங்கி குவித்தார்களோ அதை விட எங்களுடைய கல்வியின் மதிப்பு அதிகமாக இருக்கிறது.அதை தெரிந்து அவர்கள் ஆராய்ந்து செய்தார்களா என்பது தெரியவில்லை ஆனால் அவருடைய உழைப்பு அந்த படிப்பினை கொண்டு அந்தக் காலக்கட்டத்தில் அவர்கள் எடுத்த முடிவு இப்போது நினைத்தால் கூட ஆச்சர்யமாக இருக்கிறது. அதனால் அம்மாதான் என்னுடைய இன்ஸ்பிரேசன்.

6. உங்கள் கனவுத்திட்டம்?

என்னுடைய கனவுத்திட்டம் என்பது நிறைய மக்களுக்கு உதவிகள் செய்யவேண்டும். நிறைய திட்டங்களை மக்களுக்கு கொண்டு போனாலே மாற்றங்கள் வரும். இன்றைய அரசுத்திட்டங்கள் பல எல்லாத்தரப்பு மக்களின் பொருளாதாரத்தேவையை நிறைவேற்றும்வண்ணம் இருக்கிறது.அரசு அதிகாரிகள் அதனை சரியான இடத்தில் கொண்டு போய் சேர்த்தாலே நம்நாடு நல்ல நிலைக்கு வரும்.
என்னுடைய அம்மாவை பார்த்து கற்றுக்கொண்டதா என்னவென்று தெரியவில்லை. என்னுடைய கவனம் என்பது கல்வியில் இந்த சமூதாயத்தை முன்னேற்ற முடியும் என்பது தான். இதுதான் என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை.

7. இன்றைய மாணவப்பருவத்திற்கு சொல்ல விரும்புவது?

இன்றைக்கு இருக்கிற இளைய சமூதாயத்தினர் ரொம்ப இயல்பா வாழ்க்கையை எடுத்துக்கொள்கிறார்கள். வறுமை போன்ற எந்த ஒரு சூழ்நிலையிலும் மாற்றத்தை கொண்டுவரவேண்டும் என்றால் அது கல்விதான். அது ஒரு முதலீடு இல்லாத வளர்ச்சி என்பதை உணர்ந்து கடினப்படவேண்டும். இன்றைக்கு இருக்கும் இளைஞர்களுக்கு போட்டித்தேர்வில் பங்கேற்க ஆசை இருக்கிறது.
ஆனால் அதற்கான உழைப்பினை கொடுக்க முன்வரமால் இருக்கிறார்கள். சிவில் சர்வீஸ்க்கு முயற்சிக்கிறார்கள் ஆனால் இரண்டு அட்டம்ட் பண்றாங்க மூன்றாவது முறை முயற்சி செய்யாமல் எம்லாய்மெண்ட் ஆஃபீஸ் மற்றும் எங்கே வேலை கொடுக்குகிறார்களோ அங்கே போய் மனு எழுதிக்கொடுக்கும் சம்பவம் இன்று நிறையாக நடக்கிறது. வேலைவாய்ப்பு துறை மூலமாக இன்று எங்கேயும் வேலை பெறுவது கடினம்.
இந்த மாற்றத்தை இளைஞர்கள் புரிந்துகொள்ளாமல் இருக்கின்றனர். அதாவது கடின உழைப்பு போடுகிறார்கள் அந்த கடின உழைப்புக்குள் அது கிடைக்காத தருணத்தில் அதனை கைவிடுகிறார்கள். ஒரு லட்சியத்தை அடையும் வரை போராடும் குணம் இன்றைய இளைஞர்களுக்கு வேண்டும்.

8. இன்றைய இளைஞர்களுக்கு என்ன தேவை?

சினிமாவில் பார்த்து அந்த ஐடி செக்டரில் போய்ட்டு நல்லா டை கட்டிக்கிட்டு டைமுக்கு ஆஃபிஸ் போய்கிட்டு வரவேணும் என்கிற மாயையில் இருக்கின்றனர். உண்மையான வாய்ப்புகளை அவர்கள் ஆராய்ச்சி பண்ணுவதெல்லாம் கிடையாது. சினிமாவில் வருகிற வேலை சூழ்நிலை எப்படி இருக்கிறதோ அதை நோக்கியே தனது பர்சனாலிட்டியையும் வளர்த்துகொண்டு இருக்கிறார்கள்.
சின்னப் பிள்ளையில் டாக்டர் ஆகவேண்டுமென ஆசைப்பட்டவர்கள் இப்போது ஐடியில் வேலை செய்கின்றனர்.கேட்டால் இந்த வேலை நல்லா இருக்கிறது என்கிற மாயையில் சிக்கியிருக்கின்றனர். அவர்களின் ரோல் மாடல் எல்லாம் ரொம்ப ஈஸியானதானதாக இருக்கிறது. கடினப்பட்டு முன்னேற வேண்டும் என்கிற எண்ணம் தற்போது குறைந்திருக்கிறது.

9. தமிழ்மொழி வளரவும், காக்கவும் என்னவெல்லாம் செய்ய வேண்டும்?

இப்போது சிங்கப்பூர்,மலேசியா போன்ற நாடுகளில் தமிழ் பேசுபவர்கள் அதிகம் இருக்கின்றனர். அங்கே இன்னும் தூய்மையான தமிழ் கூட இருக்கிறது. தாய்க்கும் தாய்மொழிக்கும் இடையே வேறுபாடு கிடையாது. இந்த தலைமுறையில் யுரோப்பில் பார்க்கும்போது ஐடி செக்டாரில் இன்றைக்கும் குழந்தைக்கு தமிழ் கற்றுக்கொடுப்பதை இழிவாக நினைக்கிறார்கள்.
எந்த ஒரு சமூதாயத்தில் கற்கும் திறனை ஒருவர் ஆரம்பிக்கும் போது அதனை அவர்கள் தாய்மொழியில் தான் ஆரம்பிக்க வேண்டும்.இது ஒரு உளவியல் ஆய்வு. தமிழினை கற்றுக்கொண்டு இதில் இருந்து நிறைய மொழிகள் எத்தனையோ அறிவியல் வளர்ச்சிகளை கூட கற்றுக்கொள்ளலாம்.  தமிழினை கற்றுக்கொள்ளாமல் ஆங்கில் கற்றுக்கொண்டால் அதனையும் உங்களால் முழுமையாக கற்றுக்கொள்ள முடியாது. எந்த ஒரு மனித வளர்ச்சி அவனுடைய ஆரம்பம் அவனது தாய்மொழிதான்.
இன்றைக்கு பள்ளியில் மாணவர்கள் தமிழில் நன்றாக பேசுகிறான் எழுத தெரியவில்லை. முதல் வகுப்பு தமிழாக இருக்கிறது.அடுத்த வகுப்பு ஆங்கிலமாக இருக்கிறது.அவன் தமிழினை கற்பதா? இல்லை ஆங்கிலம் கற்பதா?  இதனை ஒன்றாம் வகுப்பில் இருந்து அவன் தடுமாடுகிறான்.ஆகவே அவன் அடிப்படை தாய்மொழியாக இருக்கவேண்டும்.

10. உங்களது ஆட்சியர் பயணம் எப்படிப்பட்டதாக இருக்கிறது?

எனக்கு கிடைத்த வாய்ப்பினை ஒழுங்காக பயன்படுத்த வேண்டும் என நினைக்கிறேன்.ஒரு பொருளை விற்பதற்கு மார்க்கெட்டிங் தேவைப்படும்.ஆனால் ஒரு திட்டம் கொண்டு வந்தால் அதற்கு மார்க்கெட்டிங் தேவையில்லை.அதுவா மக்களை சென்றடையும்.  அப்படி ஒரு நிலைமை இருக்கிறது.ஆனால் இதனை சேரவேண்டிய மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது எனபது கடினம்.
எப்படி ஒரு கெடுதல் செய்வது ரொம்ப கஷ்டப்பட்டு செய்யும் காரியமோ அதுமாதிரி ஒருவனுக்கு நல்லது செய்வது என்பதும் கஷ்டம். நான் காரில் செல்லும்போது ரோட்டின் ஓரத்தில் பொருள் விற்பார்கள்.அதனை இறங்கி வாங்கும்போது அரசின் திட்டங்கள் எவ்வளவோ இருக்கும்.அதனை செயல்படுத்தினால் அவர்களின் நிலை மாறும் என்ற எண்ணம் உண்டாகும்.
அரசின் திட்டம் ஒரு டார்கெட்டாக இருக்கும் இன்றைக்கு நூறு பேருக்கு ஆடுகொடு என்பது மட்டுமின்றி அதனை சரியான மக்களுக்கு கொண்டு போய் சேர்ப்பதில் தான் கவனமாக இருக்க வேண்டும்.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

One response to “திருவண்ணாமலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி அவர்களுடன் ஒரு சிறப்பு நேர்காணல்: லட்சியத்தை அடையும் வரை போராடும் குணம் இளைஞர்களுக்கு வேண்டும்! கலெக்டர் பேச்சு”

  1. விஜயலெட்சுமி வெங்கட் says:

    சிறப்பான கேள்வியிலிருந்து சிறந்த பதில்கள் கிடைக்கும். மிகச் சிறந்த நேர்காணல். அருமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *