கிருட்டினகிரி மாவட்டம், பர்கூர் அருகே அமைந்துள்ள ஸ்ரீ ராஜ் மழலையர் பள்ளி ஆண்டு விழாவின் போது பள்ளி குழந்தைகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் வெகு விமர்சசியாக நடைபெற்றது,
கிருட்டினகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள சிந்தகம்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியின் 7 ம் ஆண்டுவிழா வெகு விமர்ச்சியாக நடைபெற்றது.
மாவட்ட கல்வி அலுவலர் திரு. நடராஜன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவின் போது பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி.இந்துமதி, வட்டார கல்வி அலுவலர் திரு.சம்பத் அவர்கள், சட்டமன்ற உறப்பினர் திரு.சிவி. இராஜேந்திரன் அவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குழந்தைகளுக்கு படிப்போடு ஒழுக்கத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும் குறிப்பாக இயற்கையை பாதுகாக்க அனைத்து மாணவ, மாணவிகள் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்து வீடுகளில் கட்டாயம் மரக்கன்றுகளை நட முன்வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும் இந்த விழாவின் போது பள்ளிக்கு 100 சதவிதம் வருகைபுரிந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டப்பட்டது, இதே போல விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இயற்கையை அழிப்பதினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நாடகம், மற்றும் கிராமிய பாடல்களுக்கு குழந்தைகளின் வண்ணமிகு நடன நிகழ்வுகளும் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த விழாவின் போது முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் பெருமாள், அதிமுக ஒன்றிய செயலாளர் ஜெயபாலன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் மாதையன், முன்னாள் ஆவின் தலைவர் தென்னரசு, பள்ளியின் தாளாளர் திரு.குப்புசாமி, பெற்றோர் சங்க தலைவர் திருமதி சாவித்திரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
Leave a Reply